search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shops"

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்று இரவுதான் சற்று குறைந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை புரட்டுப்போட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளிக்கின்றன.

    நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்று இரவுதான் சற்று குறைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்ற கனமழை காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இன்று காலை தற்போது சூரியன் சற்று எட்டிப்பார்த்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேங்கிய மழைநீரை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும், கடைகள் திறக்கப்படாததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    ஒன்றிரண்டு டீக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும், பிஸ்கட் போன்ற எந்த பொருட்களும் இல்லை. போதுமான பால் கையிருப்பு இல்லை என டீ மற்றும் காபியை பார்சலில் கட்டிக் கொடுக்க மறுக்கின்றனர்.

    தற்போது பிரதான சாலைகளில் மழை நீர் மெல்லமெல்ல வடிய ஆரம்பித்துள்ளது. ஆனால், உட்புற சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி குளம்போல்தான் காட்சியளிக்கின்றன.

    • பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் இரும்பாலை பகுதி என மொத்தம் 143 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கும் 3½ இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    விபத்து இல்லாமல் மாசற்ற வகையில் தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். அரசின் அறிவுறுத்தல் படி அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர்.
    • கடைகள் இடிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் மற்றும் விளம்பர போர்டுகள் வைத்து இருந்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • மன்னார்குடியில் புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி கர்ணன், மன்னார்குடி நகர சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் ஆகியோர் மன்னார்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் மன்னார்குடி பஸ் நிலையம், கடைத்தெரு, தாலுகா அலுவலக ரோடு, பந்தலடி, கீழப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகள் கண்டறியப்பட்டன.

    இந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 கடைகளுக்கும் சீல் வைத்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    • மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பூா்:

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகளை அடைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மதுபானக்கூடங்களுடன் செயல்படும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மேற்கண்ட நாட்களில் மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது 

    • பிஸ்கட் விற்பனை செய்த வகையில் ரூ.3.50 லட்சத்தை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
    • பணத்தை கொடுக்குமாறு கேட்ட நிறுவன ஊழியர்களை அவர் மிரட்டி உள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை இந்திராநகரை சேர்ந்தவர் ராகினி (வயது 26).

    இவர் சொந்தமாக பிஸ்கட் ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக விற்பனையாளராக தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த தேவேந்திரன்(42) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் தேவேந்திரன் கடைகளில் பிஸ்கட் விற்பனை செய்த வகையில் அதன் மூலம் வசூலான ரூ.3.50 லட்சத்தை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த பணத்தை கொடுக்குமாறு கேட்ட நிறுவன ஊழியர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார்.

    இது குறித்து ராகினி தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்தனர்.

    • ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மானாமதுரையில் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
    • இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையமாகும். இந்தியாவின் முக்கிய புண் ணிய ஸ்தலமான ராமேசுவ ரத்துக்கு இங்கு இருந்துதான் செல்ல முடியும். மேலும் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது பெரும் முயற்சி செய்து விருதுநகர்-மானாமதுரை இடையே ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுத் ததால் இப்போது மதுரை, திண்டுக்கல் சுற்றிசெல்லா மல் குறைந்த பயண தூரத் தில் தென்மாவட்டங்களுக்கு ரெயில் வசதிகள் கிடைத்துள்ளது.

    ஆனால் தற்போது ரெயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் மற்றும் சிவகங்கை ரெயில் நிலை யங்களில் ரெயில்கள் நிற்காமல் செல்ல நடவ டிக்கை எடுத்துள்ளது. பத்து ஆண்டுகளாக மானாமதுரை யில் இருந்து மன்னார்குடி சென்ற ரெயில் தற்போது காரைக்குடியில் இருந்து செல்கிறது.

    காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பி ரஸ் ரெயிலை மானாமதுரை யில் இருந்து இயக்ககோரியும், பைபாஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை அகற் றக்கூடாது என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கடைய டைப்பு போராட்டம் நடத்து வது என தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக தீர்மான மும் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

    மானாமதுரை புறவழிச் சாலையில் ஆனந்தபுரம் பகு தியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையை ஏராள மான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பாதையை மூடவும், கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் செயல்ப டுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதில் மாற்றுப்பாதை அமைக்கும் வரை புறவழிச்சாலையில் ரெயில்வே கட வுப்பாதையை மூடக்கூடாது. இதை மீறி மூடினால் கட வுப்பாதை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். சமீபத்தில் நிறுத்தப்பட்ட திருச்சி-மானாமதுரை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

    வருகிற 23-ந்தேதி வர்த் தக சங்க ஒத்துழைப்புடன் மானாமதுரையில் கடையடைப்பு போராட்டம் நடத்து வது எனவும் தீர்மானிக்கப் பட்டது. இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    • நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • வாடகை செலுத்தாத 3 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

    இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடை களில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மூன்று கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளர்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளர் ரவி அலுவலக உதவியாளர் ஜானகிராமன் உடன் இருந்தனர்.

    • கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.
    • தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலம்:

    சேலம் லாரி மார்க்கெட் அருகே உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

    சேலம் மாநகரில் கனமழை பெய்யும் போது அரிசிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த பகுதியில் அதிகளவில் தேங்குகிறது.

    இதனால் அங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் கடை உரிமையாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் பங்கஜ் என்பவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய்களை தூர்வாராததால் அரிசிபாளையம் பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் எங்களது கடைக்குள் புகுந்து விடுகிறது.

    இதனால் கடையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வீணாகி சேதமாகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதே நிலை தொடர்ந்தால் விரைவில் மாநகராட்சி அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் தண்ணீர் தேங்கா தவாறு சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.
    • ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, மேலாளர் சண்முகராஜா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர்.

    காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.இதில் வியாபாரிகள் கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் 14 கடைகளும், தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளும், தலா ரூ. 11ஆயிரம் முதல் 11.500 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டது.

    இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு கோரிக்கை
    • பஸ் நிலையத்தை செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வணிகர் கூட்ட மைப்பின் பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலை மையில் கூட்டமைப்பின் தலைவர் பாபு, பொருளாளர் தங்கமணி, ஒருங்கிணைப்பாளர் சித்திக், பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்த இருக்கும் பஸ் நிலையத்தை செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

    தற்போது அங்கு உள்ள கடை உரிமையாளரிடமே மீண்டும் கடையை ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    நகராட்சி ஆணையர் புதுச்சேரி வணிகர் கூட்ட மைப்பினரின் வேண்டு கோளை ஏற்று கடைகளை ஏற்கனவே உள்ள வியாபாரி களிடமே ஒப்படைப்பதாக உறுதியளித்தார்.

    ×