search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீண்ட இழுபறிக்கு பின் கொண்டத்து காளியம்மன் கோவில் கடைகள் ரூ7.10 லட்சத்திற்கு ஏலம்
    X

    கோப்புபடம்.

    நீண்ட இழுபறிக்கு பின் கொண்டத்து காளியம்மன் கோவில் கடைகள் ரூ7.10 லட்சத்திற்கு ஏலம்

    • கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.
    • டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற உள்ளது.திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.குறிப்பிட்ட தொகை வராத காரணத்தினால் 10ம் தேதி நடக்க இருந்த டெண்டரை மீண்டும் 20 ஆம் தேதி மாற்றி வைத்தனர்.

    இந்த நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவில் நிர்வாகமே கடைகளை வாடகைக்கு விட வேண்டும் .டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.நேற்றுகாலை 10 மணி அளவில் டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்க ப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மாலை 4 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது. வியாபாரிகள் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலக அலுவலர் அலுவலகம் முன்பு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவில் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆய்வாளர் ஆதிரைகோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியவர்கள் முன்னிலையில் டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டரை ஈட்டு வீராம்பாளையம் ஊராட்சி சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ரூ 7லட்சத்து பத்தாயிரத்திற்கு டென்டரை எடுத்தார்.மேலும் டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    Next Story
    ×