search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department"

    • புதுவை தொழிலாளர் துறை ஆணையர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • தொழிலாளர் துறை வளாகத்தில் நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை ஆணையர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் பல தனியார் நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தொழிலாளர் துறை வளாகத்தில் நடத்தப்படுகிறது.

    100-க்கும் மேற் பட்ட இடங்களை நிரப்ப என்ஜினியரிங், கலை, அறிவியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 10, 12-ம் வகுப்பு படித்த அனைத்து மாணவ ர்களும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர் தங்கள் தற்குறிப்பு, கல்விதகுதி உண்மை, நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நகராட்சித்துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் தொடக்க விழா நடந்தது.

    கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். காரைக்குடி நகரசபை தலைவர் முத்து துரை முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. வரவேற்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ தாஸ்மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரை யாற்றினர்.

    புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ெபரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், காரைக்குடி நகராட்சிப் பகுதிக்கென நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தற்போது ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் வீட்டு கழிவுநீர் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் வலை அமைப்பு வடிவ மைக்கப்பட்டு திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றார்.

    அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாகவும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி களுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, இ.சேவை மையம் மூலமாகவோ மனுக்கள் அளித்து, அதன்மூலம் தீர்வு பெற்று, பயன்பெறலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேதியியல் துறை சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
    • தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வேதியியல் துறையின் சார்பில் "வேதியியல் துறையில் வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் பாலமுருகன், வேதியியல் துறை மூத்த பேராசிரியர் எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பற்றியும், அதற்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்தி கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் எடுத்துரைத்தார். போட்டித் தேர்வு பற்றிய செய்திகளை தொலைத் தொடர்பு ஊடகம், செய்திதாள் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்றும் எடுத்து கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வேதியியல் துறை வேலைவாய்ப்பு பற்றியும் விளக்கினார்.

    முதுநிலை முதலாமாண்டு மாணவி ஷர்மிளா நன்றி கூறினார்.

    • வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழப்பாடி வட்டத் தலை வர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி துணை வட்டாட்சியர் பதவியிறக்கத்தை ரத்து செய்து பதவி உயர்வை வழங்க ஆணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியி டங்களை நிரப்ப வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி பெயர் மாற்ற அர சாணை வழங்க வேண்டும். 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர். துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை நாடார் மகாஜன மேன்சன் மினி அரங்கத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    ஜெயக்குமார், பிரபாகரன், சுவீட்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மோட்டார் உதிரி பாக விற்பனையாளர் சங்கம் கண்ணழகன், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, சில்வர் சிவா, கரண்சிங், கார்த்தி, காந்தி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வணிக வரித்துறையி னரால் நடத்தப்படும் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற அடிப்படையில் கடைகளில் நடைபெறும் அத்துமீறலை ரத்து செய்யவேண்டும்.

    வாகன விதி மீறல் என்ற பெயரில் நடைபெறும் அதிரடி நடவடிக்கையை தடை செய்யவேண்டும்.

    மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்ற எரிபொருளின் விலை உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம், வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் தியாகத்தை போற்றும் வகையில் 100 அடி வெண்கல சிலை அமைத்து கப்பலில் நிற்பது போல் வடிவமைத்து சென்னை, தூத்துக்குடி, குமரி கடற்கரையில் நிறுவ தமிழக அரசை கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேற்கண்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கண்ணன், பழம், ரவிச்சந்திரன், முத்துராஜ், சுருளி, கோகுலம் கணேசன், பெருமாள், ஜெயராஜ், கணேசன், செந்தில்குமார், மகளிரணி விக்டோரியா, பாக்கியலட்சுமி, கோகிலா, சித்தலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் குட்டி என்ற அந்தோணி ராஜ் செய்திருந்தார்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழக இ.சி.இ. துறைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது.
    • டீன்கள், மற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், டெக்னீசியன்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளை் பாராட்டினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தேசிய அங்கீகார வாரியம் (என்.பி.ஏ) அடுக்கு-1, வாஷிங்டன், அக்கார்டு அமைப்பின் கீழ் 2-வது முறையாக, மறு அங்கீகார ஆய்விற்கு, உயர்கல்வி நிறுவனங்களின் மூத்த பேராசிரியர் குழு கடந்த மாதம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தது. 3 நாள் நடத்திய ஆய்வு அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ் துறைக்கு மிக உயர்ந்த 6 ஆண்டுகள் அங்கீகார அந்தஸ்தையும், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் துறைக்கு 3 ஆண்டு அங்கீகார அந்தஸ்தையும் வழங்கி பாராட்டியது.

    இதனால் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சர்வதேச அளவில் உயர்படிப்பும், வேலை வாய்ப்பும் எளிதாக கிடைக்கும். பல்கலைக்கழக வேந்தர், கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் எஸ்.அறிவழகி, துணை தலைவர்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அர்ஜூன்கலசலிங்கம், பதிவாளர் வி.வாசுதேவன் ஆகியோர் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று சாதனை புரிந்த பேராசிரியர்கள், துறை தலைவர்கள், இயக்குநர்கள், டீன்கள், மற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், டெக்னீசியன்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளை் பாராட்டினர்.

    • முதுகுளத்தூரில் சிறப்பு செயலாக்க துறையின் திட்டங்கள் ஆய்வு நடந்தது.
    • உதவி வேளாண்மை அலுவலர் சுபதர்ஷினி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

    முதுகுளத்தூர், ஆக. 14-

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் ஒரு பகுதியாக 2021-22 ஆம் ஆண்டில் விளக்கனேந்தல் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பசு மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளைப் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் திட்டத்தின் தாக்கம் குறித்து கலந்துரையாடினர்.

    திட்டத்தின் கீழ் பல்வேறு இனங்களின் கீழ் வழங்கப்பட்டவை பராமரிப்பில் உள்ளதா? என ஆய்வு செய்தனர். கால்நடை பராமரிப்பில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்த பகுதி கால்நடை மருத்துவர் அறிவுரை வழங்குவதை விசாரித்தனர். உதவி வேளாண்மை அலுவலரால் பராமரிக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் பட்டியல் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்ட பதிவேடுகளை பார்வையிட்டனர்.

    பின்னர், வரும் ஆண்டுகளில் இவற்றைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுபதர்ஷினி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

    • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சுப்பராயன் எம்.பி. முன்னிலையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, தலைமை டாக்டர் விஸ்வேஸ்வரன், டாக்டர்கள் செல்வம், சுரேந்திரன், விஜயா, கலைவாணி, ஆத்மாதன், ராம்குமார், தலைமை செவிலியர் மலர்விழி, அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுதபாணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா, வட்டாரத் தலைவர் பழனிமுத்து, நகர தலைவர் ஜலாலுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தாளவாடி, ஜூன்.16-

    ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×