search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional"

    • கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
    • திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை

    மண்ணச்சநல்லூர்,  

    மண்ணச்சநல்லூர் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் காலை மாலையில் பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்டோர் போதுமான பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ மாணவிகள் பள்ளி படிப்புகாகவும், பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும் சமயபுரம், திருப்பைஞ்சீலி எதுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான பள்ளி மாணவர்கள் படித்து வருவதால் போதுமான பேருந்து வசதியின்றி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர்.எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் மண்ணச்சநல்லூர் பணிமனையில் இருந்து சமயபுரம் திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .

    • ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்
    • கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    • ஆடி தபசு, ஆடி பெருக்கை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.
    • தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாகவும், அதே போல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    மேலும் ஆடி பவுர்ணமி, ஆடிதபசு, ஆடி 18-ம் பெருக்கு திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டம் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், திருப்பரங்குன்றம் பவுர்ணமி கிரிவலம், சதுரகிரி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சங்கரன்கோவில், மடப்புரம், அழகர் கோவில், ஆடி 18-ம் பெருக்கு திருவிழா, குச்சனூர் சனி பகவான் கோவில், சுருளி தீர்த்தம், சடையாண்டி கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், பழனி ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
    • ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தாரமங்கலம்;

    சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் ஊராட்சி பகுதியில் நடைபெறும் திட்ட பணிகளான குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம், பவளத்தனுர்,பாப்பாம்பாடி கரட்டூர்,வணிச்சம்பட்டி ஆகிய பகுதியில் பள்ளிகட்டிட பணிகள், சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பாப்பாம்பாடி தச்சங்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்புகள், ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் கிராம ஊராட்சி ரவிச்சந்திரன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

    • சேலம் மாவட்டத்தில் ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது.
    • இதற்காக சேலத்திலிருந்து 19 சிறப்பு பேருந்துகள் இயங்கி வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்காக சேலத்திலிருந்து 19 சிறப்பு பேருந்துகள் இயங்கி வந்தது.

    கோடை விழா நிறைவடைந்ததால் சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஏற்கனவே கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் சேலம் செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 4 மணி நேரமாக ஏற்காடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலாப் பயணிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஏற்காடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதை தொடர்ந்து ஏற்காட்டுக்கு கூடுதலாக பஸ் இயக்க போக்குவரத்து துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ் விடவும் நடவடிக்கை எடுக்கபப்ட்டு உள்லது என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ரூ.30.50 கோடியில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கூடுதல் ஒருங்கி ணைந்த அவசர கால தாய்-சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் 50 படுக்கை கள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 2 தளங்களுடன் ஒருங்கிணைந்த அவசரகால தாய்-சேய் சிகிச்சை மையத்திற்கான கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் 2 கூடுதல் பிரிவு கட்டிடங்க ளுக்கான கட்டுமான பணிகள் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அத்திய வசியமாக விளங்கி வரும் மருத்துவத்தை எளிதாக கிடைக்கப்பெறச் செய்து அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்து வத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அந்த திட்டங்களின் மூலம் பயன்பெற்று உடல்நலதை சிறந்த முறையில் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள கூடுதல் பிரிவு கட்டிடங்களை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆன்ந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • திருச்சி மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில்

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகன நிறுத்தமிடங்கள் உள்ளன. இது தனியாருக்கு ஏலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஏலதாரர்கள் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    24 மணி நேரத்துக்குஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூ. 15 வசூலிக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது.

    ஆனால் இந்த வாகன நிறுத்துமிடங்களில் காலை 10 மணிக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு மறுநாள் காலை 9 மணிக்கு வாகனத்தை எடுக்கச் சென்றால் இரண்டு நாட்களுக்கு உரிய கட்டணத் தொகை ரூ.30 வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து கேட்டால் நள்ளிரவு 12 மணியுடன் ஒரு நாள் கணக்கு முடிந்து விடுகிறது. அதற்குப் பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக வண்டி எடுத்தாலும் இன்னொரு நாள் கணக்கு வந்துவிடும் என புதிய விளக்கம் அளிக்கிறார்கள்.

    12 மணி நேரத்துக்கு ரூ. 15 வசூல் செய்வது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது.

    வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக கட்டணம் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகள் மீறி கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×