என் மலர்
நீங்கள் தேடியது "வழிபாட்டு தலம்"
- பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
- சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்
பீகாரில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் சந்திபில் பேசிய அவர், பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சிறுவர்களிடையே வன்முறைப் குணம் உருவாவதைத் தடுப்பது, பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாப்பது, சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை தவிர்ப்பது, பொது இடங்களில் தூய்மையைப் பராமரித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார்.
மேலும், மக்களின் உணவு விருப்பங்களுக்கு அரசு எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட விஜய் குமார் சின்ஹா, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், சமூக கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறினார்.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற இடங்களில், இறைச்சிக் கடைகள் பொதுமக்களின் பார்வையில் நேரடியாகப் படாதவாறு திரைகள் அல்லது கண்ணாடி பேனல்கள் மூலம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் வழிபாடுகள் நடக்கும்போது ஒருசில அமைப்பினா் இடையூறு செய்கின்றனா்.
- திருச்சபை போதகா்கள் மற்றும் ஐக்கியங்களின் தலைவா்கள் கூட்டம் விஜயாபுரத்தில் உள்ள திருச்சபையில் நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட திருச்சபை பாதுகாப்பு கூட்டமைப்பின் சாா்பில் அனைத்து திருச்சபை போதகா்கள் மற்றும் ஐக்கியங்களின் தலைவா்கள் கூட்டம் விஜயாபுரத்தில் உள்ள திருச்சபையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருப்பூரில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் வழிபாடுகள் நடக்கும்போது ஒருசில அமைப்பினா் இடையூறு செய்கின்றனா். இது கண்டிக்கத்தக்கதாகும். இதே போன்ற சம்பவங்கள் தொடா்ந்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை போதகா்களும், கிறிஸ்தவ மக்களும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஆடி தபசு, ஆடி பெருக்கை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.
- தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
மதுரை
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாகவும், அதே போல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
மேலும் ஆடி பவுர்ணமி, ஆடிதபசு, ஆடி 18-ம் பெருக்கு திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டம் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், திருப்பரங்குன்றம் பவுர்ணமி கிரிவலம், சதுரகிரி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சங்கரன்கோவில், மடப்புரம், அழகர் கோவில், ஆடி 18-ம் பெருக்கு திருவிழா, குச்சனூர் சனி பகவான் கோவில், சுருளி தீர்த்தம், சடையாண்டி கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், பழனி ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.






