என் மலர்
நீங்கள் தேடியது "meat shops"
டெல்லி அருகே இறைச்சி கடைகளை மூடும்படி மிரட்டிய இந்துசேனா அமைப்பினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குர்கான்:
டெல்லியின் புறநகரான குர்கானில் நேற்று நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி இந்துசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் பாலம் விகார், பாத்ஷாபூர் மற்றும் ஓம்விகார் ஆகிய பகுதிகளில் திடீர் பேரணி நடத்தினர். கைகளில் தடி, ஹாக்கி மட்டைகள், கத்திகள் மற்றும் இரும்பு கம்பிகளை வைத்திருந்தனர்.
பேரணி செல்லும் வழியில் 250-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் திறந்திருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நவராத்திரி விழா அன்று இறைச்சி கடைகளை திறக்க கூடாது அவற்றை மூட வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.
பல இறைச்சி கடைகளின் ‘ஷட்டர்’ கதவுகளை இழுத்து மூடினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. வீதிகளில் இருந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அமைதி ஏற்படுத்தினர். கண்காணிப்பு கேமரா வீடியோ மூலம் இந்துசேனா அமைப்பை சேர்ந்த ராஜேஷ், பிரமோத்சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் 40 பேர் மீது மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews