என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளுவர் தினம்"

    • திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!
    • அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!

    அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.
    • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு வழங்கினார்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    * பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.

    * தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கினார்.

    * திருவள்ளுவர் விருதை மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கினார்.

    * அம்பேத்கர் விருதை சிந்தனைச்செல்வனுக்கு வழங்கினார்.

    * காமராஜர் விருதை எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கினார்.

    * பாரதியார் விருதை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கினார்.

    * பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் யுகபாரதிக்கு வழங்கினார்.

    * தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு வழங்கினார்.

    * முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை சு.செல்லப்பாவுக்கு வழங்கினார்.

    * இலக்கிய மாமணி விருது (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கு வழங்கினார்.

    * இலக்கிய மாமணி விருது (ஆய்வுத்தமிழ்) சி.மகேந்திரனுக்கு வழங்கினார்.

    * இலக்கிய மாமணி விருது (படைப்புத்தமிழ்) இரா.நரேந்திரகுமாருக்கு வழங்கினார்.

    விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது திருவள்ளுவர் நம்பிக்கை வைத்தார்.
    • திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

    திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏராளமான வட மாநில பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக தமிழ் கற்பதை காண முடிந்தது.
    • தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை...!

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்"

    என்று தொடங்கி...

    நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் சென்ற நாடுகளிலெல்லாம் தமிழையும் தமிழ் மொழியின் தொன்மையையும் போற்றுவதோடு, தமிழ் மொழி நம் பாரத தேசத்தின் முதன்மையான மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று, வரலாற்றில் முன்பு யாரும் செய்யாத அளப்பரிய காரியங்களை தமிழ் மொழிக்காக செய்து வருபவர்.

    "உலகப் பொதுமறையாம் திருக்குறளை" மேலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்ததோடு நின்றுவிடாமல், வடமாநில பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழி கற்பதின் அவசியத்தை உணர்த்தியவர். இதற்குச் சான்றாக தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான வாரணாசியில் "காசி தமிழ் சங்கமம்" நிகழ்வில் ஏராளமான வட மாநில பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக தமிழ் கற்பதை காண முடிந்தது.

    தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை...!

    திருவள்ளுவர் தினத்தில் அய்யனின் புகழைப் போற்றி வணங்குவோம் என்று கூறியுள்ளார்.

    • இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.
    • தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.

    சென்னை:

    வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!

    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

                                        - திருவள்ளுவர்

    சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.

    வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்.

    இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.

    தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.

    இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! என்று கூறியுள்ளார். 

    • மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
    • தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகிற 16-ந் தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ந் தேதியும் டாஸ்மாக் கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை அன்று செயல்படாது. மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

    தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • 6-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது.
    • அந்த 2 நாட்களும் தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டா–டப்படுகிறது.

    எனவே அந்த 2 நாட்களும் தஞ்சை மாவட்டத்தில் இயங்கு வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கினார்.

    • மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கவர்னர் ஆர்.என்.ரவி.
    • வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

    மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கவர்னர் ஆர்.என்.ரவி.

    முன்னதாக, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
    • திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்.

    புதுடெல்லி:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.

    மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். திருக்குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
    • புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

    அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது.

    இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
    • அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

    133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

    குறள் நெறி நம் வழி!

    குறள் வழியே நம் நெறி!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×