திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகிற 16-ந் தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ந் தேதியும் டாஸ்மாக் கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை அன்று செயல்படாது. மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com