என் மலர்
நீங்கள் தேடியது "thirukkural"
- தமிழ்நாட்டிலிருந்து ஓர் இந்தியனாக எழுதுகிறேன்...
- தாங்கள் காலமெல்லாம் போற்றிவரும் திருக்குறள் இனம் மொழி மதம் நாடுகடந்த உலகத்தின் அசைக்கமுடியாத அறநூல்...
சென்னை:
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு
இந்தியப் பிரதமர் அவர்களே!
தங்களின்
விடுதலைத் திருநாள் பேருரைக்கு
மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த
தங்கள் மாண்புக்கு
என் ஜனநாயக வணக்கம்
தமிழ்நாட்டிலிருந்து
ஓர் இந்தியனாக எழுதுகிறேன்
தாங்கள்
காலமெல்லாம் போற்றிவரும்
திருக்குறள்
இனம் மொழி மதம் நாடுகடந்த
உலகத்தின் அசைக்கமுடியாத
அறநூல்
மனிதம் என்ற
ஒற்றைக் குறிக்கோளை
உயர்த்திப் பிடிப்பது
அதனை
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்க வேண்டும் என்பது
தமிழர்களின் நீண்ட கனவு
மற்றும்
நிறைவேறாத கோரிக்கை
இந்தியாவின்
79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்
திருக்குறள்
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை
வெளியிட வேண்டுகிறோம்
தாங்கள்
கேட்டுக்கொண்ட வண்ணம்
நமோ செயலியிலும்
இதனைப் பதிவிடவிருக்கிறோம்
இது
உலகப் பண்பாட்டுக்கு
இந்தியா கொடுக்கும் கொடை
என்று கருதப்படும்;
ஆவனசெய்ய வேண்டுகிறோம்
ஆகஸ்ட் 15 அன்று
தொலைக்காட்சி முன்னால்
ஆவலோடு காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
- யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார்
- அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக்கொள்ளுங்கள்
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜூலை 13இல்
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக்கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது.
- தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்.
- வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். இந்த நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
இந்நிலையில், தன் பிறந்தநாளை ஒட்டி, தான் எழுதிய நூலை கலைஞர் நினைவிடத்தில் வைத்து கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோவை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
முத்தமிழறிஞரே!
முதல் தமிழாசானே!
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
உங்கள்
நினைவிடம் சேர்க்கிறேன்;
நெஞ்சு நிறைகிறேன்
அப்பாவின் சட்டையை
அணிந்துகொள்ள ஆசைப்படும்
குழந்தையைப்போல
நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு
நானும் எழுதியிருக்கிறேன்
உரையாசிரியர் பட்டியலில்
சேர்வதைவிட
உங்கள் வரிசையில் சேர்வதில்
உள்ளம் கசிகிறேன்
வணங்குகிறேன்;
என் பிறந்தநாளில்
வாழ்த்துங்கள் என்னை
என்று பதிவிட்டுள்ளார்.
- மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் அங்கீகாரம் பெற முயற்சிக்கும் கதை.
- திருவள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன மிகவும் மெல்லிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கதைக்கரு
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் அங்கீகாரம் பெற முயற்சிக்கும் கதை.
கதைக்களம்
வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதோடு, ஒன்னே முக்கால் அடிகளை கொண்ட செய்யுள்களை எழுதி, அதை புத்தமாக தொகுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் அவரது காதல் மனைவி வாசுகி. அவர் எழுதிய சில செய்யுள்களை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு எடுத்துச் சென்று அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார். ஆனால், சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக அவரது செய்யுள்கள் இல்லாததால் அதை மதுரை தமிழ்ச் சங்கம் நிராகரித்து விடுகிறது.
இந்நிலையில் துரோகத்தால் ஆட்சியை பிடிக்கும் அரசருக்கும் , வள்ளுவர் வாழ்ந்து வரும் ராஜ்ஜியத்திற்கும் இடையே போர் உருவாகிறது.
ஒரு பக்கம் தனது புத்தகப் பணி மறுபக்கம் மக்களுக்கு நல்லாட்சி அமைவதற்கான யுத்த பணி என்று பயணிக்கத் தொடங்கும் திருவள்ளுவர் தனது புத்தகமான திருக்குறளை அரங்கேற்றினாரா?, போர் அவர் நினைத்து போல் மக்களுக்கு சாதகமாக அமைந்ததா? அதற்கு பிறகு என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
திருவள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன மிகவும் மெல்லிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல காட்சிகளில் அழகான நடிப்பை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுத்திருந்தார்.
அதேபோல் அவரது மனைவி வாசுகி கேரக்டரில் நடித்திருந்த தனலட்சுமி, பாண்டிய மன்னனாக நடித்துள்ள ஓஏகே சுந்தர், புலவராக வரும் கொட்டச்சி, பரிதியாக வரும் குணா பாபு உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்
திருக்குறள் நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத நூலாகும் என்பதை இந்த தலைமுறையினருக்கு எடுத்தும் சொல்லும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலகிருஷ்ணன். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். நடிகர்களின் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் வள்ளுவர் காலத்தில் படமாக்கப்பட்டது போல் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். அவரது ஒளிப்பதிவின் மூலம் நம்மை 2000 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்து செல்கின்றார்.
இசை
இளையராஜா இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசை உயிரோட்டமாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
Ramana Communications presents நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
- உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
- ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர்.
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். வரும் ஜூலை 13-ந் தேதி இந்த நூலை வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அந்தப் புத்தகத்தின் முகப்போவியத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்.
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
ஜூலை 13-ல் வெளியாகிறது.
பன்னிரெண்டு வயதில் நான் கண்ட கனவு 72 வயதில் நனவாகிறது.
உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
ஓவியத்தில் ஐயன் வள்ளுவரையே மையப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் காலங்காலமாக பெற்ற வெற்றி உட்காரும் நெற்றி, சூரியனை வெட்டி ஒட்டி வைத்த கண்.
இந்தியாவின் தெற்கை போல் கூரிய நாசி,
ஒரு வனாந்தரத்தின் ரகசியம் பேசும் மீசை,
முன்தோன்றிய மூத்த குடியின் தொன்மை சொல்லும் கல் உருவம் இவற்றின் தொகுப்போவியமாக வந்திருக்கிறது முகப்போவியம்.
ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். முதலில் ஓவியம் படைக்கிறேன். ஜூலை 13-ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன். இதோ நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம் என்று தெரிவித்துள்ளார்.
- மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான்.
- பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்.
சமயபுரம்:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசீலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்துக்கு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மஹாத்மியம், சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புதிதாக கட்டப்படவுள்ள கோவிலின் 7 பிரகாரங்களை கொண்ட மாதிரி வடிவமைப்பினை திறந்து வைத்தார். பின்னர் அவர், ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யதுகிரி யதிராஜமடம் 41-ம் பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ யதிராஜா நாராயண ராமானுஜ ஜீயர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட, அதனை தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான். அது சனாதன தர்மம் மட்டும் தான். பாரதம், ராஷ்ரியம், தர்மம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என்று கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.
- கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.
திருக்குறள் 'உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் இருக்கின்றன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.
கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். தற்போது அவர், தனக்கே உரித்தான கவித்துவ நடையில் விளக்க உரை எழுதி இருக்கிறார். முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று கவிஞர் வைரமுத்து அறிவித்து உள்ளார்.
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டி உள்ள கவிஞர் வைரமுத்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்,
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ- மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்குறம் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கொள்ளப்பெறும்.
திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிகுழுவின் முன்னி லையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும்.
ஏற்கனவே முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டு்ம் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோ தலுக்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalar chithurai.com என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 04575-241487 (99522 80798) என்ற தொலைபேசி எண்ணி்ல் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ மாணவியர் வருகிற 25-ந் தேதிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை 630 561.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருப்பூர் :
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறனுள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10ஆயிரம் பரிசு தொகை மற்றும்பாராட்டுச்சான்று வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு (2022 - 23) திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நேரடியாகவோ, https://tamilvalarchithurai.tn.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 31ந்தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகம், அறை எண் 608, 6வது தளம், கலெக்டர் அலுவலகம் திருப்பூர் என்கிற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். ddtamil.607@gmail.com என்கிற முகவரிக்கு இ-மெயிலிலும் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971183 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், உரை ஆசிரியர் விவரங்கள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள திறனாய்வுக்குழு முன்னிலையில் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே பங்கேற்று பரிசு பெற்றோர் மீண்டும் பங்கேற்க முடியாது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
- முழுமையாக குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் அரசு சான்றிதழ்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசின் மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
2022-23-ம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளிடம் இருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறல் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
திருக்குறளின் அடைமொழிகள், சிறப்பு பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யபெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர்.
1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
ஏற்கனவே இந்த பரிசை பெற்றவர்கள் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்க கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் இயங்கும் தமிழர் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் tamilvalarchithurai. tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு 04362-271530 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்.
புதுடெல்லி:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். திருக்குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.






