என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.10ஆயிரம்பரிசு
- மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருப்பூர் :
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறனுள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10ஆயிரம் பரிசு தொகை மற்றும்பாராட்டுச்சான்று வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு (2022 - 23) திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நேரடியாகவோ, https://tamilvalarchithurai.tn.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 31ந்தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகம், அறை எண் 608, 6வது தளம், கலெக்டர் அலுவலகம் திருப்பூர் என்கிற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். ddtamil.607@gmail.com என்கிற முகவரிக்கு இ-மெயிலிலும் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971183 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், உரை ஆசிரியர் விவரங்கள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள திறனாய்வுக்குழு முன்னிலையில் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே பங்கேற்று பரிசு பெற்றோர் மீண்டும் பங்கேற்க முடியாது.






