என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - பிரதமருக்கு வைரமுத்து கோரிக்கை
    X

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - பிரதமருக்கு வைரமுத்து கோரிக்கை

    • தமிழ்நாட்டிலிருந்து ஓர் இந்தியனாக எழுதுகிறேன்...
    • தாங்கள் காலமெல்லாம் போற்றிவரும் திருக்குறள் இனம் மொழி மதம் நாடுகடந்த உலகத்தின் அசைக்கமுடியாத அறநூல்...

    சென்னை:

    கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாண்புமிகு

    இந்தியப் பிரதமர் அவர்களே!

    தங்களின்

    விடுதலைத் திருநாள் பேருரைக்கு

    மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த

    தங்கள் மாண்புக்கு

    என் ஜனநாயக வணக்கம்

    தமிழ்நாட்டிலிருந்து

    ஓர் இந்தியனாக எழுதுகிறேன்

    தாங்கள்

    காலமெல்லாம் போற்றிவரும்

    திருக்குறள்

    இனம் மொழி மதம் நாடுகடந்த

    உலகத்தின் அசைக்கமுடியாத

    அறநூல்

    மனிதம் என்ற

    ஒற்றைக் குறிக்கோளை

    உயர்த்திப் பிடிப்பது

    அதனை

    இந்தியாவின் தேசிய நூலாக

    அறிவிக்க வேண்டும் என்பது

    தமிழர்களின் நீண்ட கனவு

    மற்றும்

    நிறைவேறாத கோரிக்கை

    இந்தியாவின்

    79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்

    திருக்குறள்

    இந்தியாவின் தேசிய நூலாக

    அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை

    வெளியிட வேண்டுகிறோம்

    தாங்கள்

    கேட்டுக்கொண்ட வண்ணம்

    நமோ செயலியிலும்

    இதனைப் பதிவிடவிருக்கிறோம்

    இது

    உலகப் பண்பாட்டுக்கு

    இந்தியா கொடுக்கும் கொடை

    என்று கருதப்படும்;

    ஆவனசெய்ய வேண்டுகிறோம்

    ஆகஸ்ட் 15 அன்று

    தொலைக்காட்சி முன்னால்

    ஆவலோடு காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×