அரசு திட்டபணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடியிருப்புகள் கட்டும் பணியை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
குடியிருப்புகள் கட்டும் பணியை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
Published on

தாரமங்கலம்;

சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் ஊராட்சி பகுதியில் நடைபெறும் திட்ட பணிகளான குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம், பவளத்தனுர்,பாப்பாம்பாடி கரட்டூர்,வணிச்சம்பட்டி ஆகிய பகுதியில் பள்ளிகட்டிட பணிகள், சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பாப்பாம்பாடி தச்சங்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்புகள், ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் கிராம ஊராட்சி ரவிச்சந்திரன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com