search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.30.50 கோடியில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள்
    X

    அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடங்களுக்கான பூமிபூஜையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன், டீன் சத்தியபாமா மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.30.50 கோடியில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள்

    • ரூ.30.50 கோடியில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கூடுதல் ஒருங்கி ணைந்த அவசர கால தாய்-சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் 50 படுக்கை கள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 2 தளங்களுடன் ஒருங்கிணைந்த அவசரகால தாய்-சேய் சிகிச்சை மையத்திற்கான கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் 2 கூடுதல் பிரிவு கட்டிடங்க ளுக்கான கட்டுமான பணிகள் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அத்திய வசியமாக விளங்கி வரும் மருத்துவத்தை எளிதாக கிடைக்கப்பெறச் செய்து அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்து வத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அந்த திட்டங்களின் மூலம் பயன்பெற்று உடல்நலதை சிறந்த முறையில் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள கூடுதல் பிரிவு கட்டிடங்களை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆன்ந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×