திருப்பூரில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்

ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com