search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "goods"

  • அங்கு வைத்திருந்த கயிறு, பஞ்சு கட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
  • எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

  பேராவூரணி:

  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியில் ஆர்ஜி ஃபைபர் என்ற பெயரில் தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு,கயிறு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.வழக்கம் போல் நேற்று மாலை வேலை முடித்து சென்றார். இந்நிலை யில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியதில் நிறுவனத்தில் இருந்த தளவாட சாமான்கள் , தயாரித்து வைத்திருந்த கயிறு, பஞ்சுகட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர்.எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது .

  • காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
  • வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.

  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை சிவன்தெற்கு வீதியை சேர்ந்தவர் அருள்வாசகம். இவர் குத்தாலம் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

  இந்த நிலையில் அருள் வாசகம் பணிக்கு சென்ற நிலையில், மனைவி மங்கையர்கரசியும் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று விட்டார்.

  அப்போது எதிர்பாராத விதமாக அருள் வாசகம் வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென பரவியது.

  இது குறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

  இருந்தும் வீட்டிலிருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் நில பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.

  மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படு கிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
  • தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  அதிராம்பட்டினம்:

  பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

  இந்நிலையில், அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அன்று இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கியதில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அடிப்படை உபகரணங்கள் வழங்கினார்.

  • ரூ. 15 ஆயிரம் பணம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.
  • தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார்.

  பாபநாசம்:

  பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர் ராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

  இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் விட்டு சென்றிருந்தார்.

  நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தது.

  இதில் அவர் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

  இது குறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்தார்.

  புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொ ண்டனர்.

  மேலும் தஞ்சாவூரிலி ருந்து சோழா என்ற மோப்பநாய் வரவழை க்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

  தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

  • பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி –மளிகை பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

  தஞ்சாவூர்:

  நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பாடுபடும் தூய்மை பணியாளர்களின் பங்கு மக த்தான போற்றுத லுக்குரியது.

  அவர்களது இன்றிய மையாத பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  தஞ்சை மாவட்டம் விளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியா ளர்கள் அனைவருக்கும் ரூ. 50,000 மதிப்பிட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள், புத்தாடைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது.

  ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளார் ஊராட்சி மன்றத்தலைவி மைதிலி ரெத்தினசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

  இந்த நிகழ்ச்சி யில் விளார் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  இதற்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
  • ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

  சுவாமிமலை:

  சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி கிராமத்தில் அருள்ஜோதி தெருவில் வசிப்பவர் வந்தியத்தேவன் (வயது55). லாரி டிரைவர்.இவரது கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது.

  இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

  • புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
  • கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  கும்பகோணம்:

  கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தெற்கு மடவளாகத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45).

  இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

  அதன்பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

  இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவையும் கொள்ளை போனது.
  • கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

  சுவாமிமலை:

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

  இவர் கடந்த 11-ந் தேதி திருச்சியில் உள்ள அவரது மகன் சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  இந்நிலையில், ராதாகிருஷ்ணன் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

  பின், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  பின், பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

  மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
  • இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.

  • அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
  • 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

  தஞ்சாவூா்:

  தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

  தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறம் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களை வினி யோகம் செய்து வருகிறது.

  இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும்.

  இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு ள்ளது. இது காவல்துறை தலைவரின் நேரடி கண்கா ணிப்பில் செயல்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.