மோட்டார் சைக்கிள், மளிகை பொருட்கள் திருட்டு

சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
மோட்டார் சைக்கிள், மளிகை பொருட்கள் திருட்டு
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் நாமக்கல் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ந் தேதி பணிக்கு வந்த செல்வராசு தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பு நிறுத்தினார். அப்போது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்றார்.

பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

இவை அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 4 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com