search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction"

    • கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.
    • தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

    உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிக பட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தரைதளம் மற்றும் 3 தளத்துக்கு இதுவரையில் 12 மீட்டர் உயரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 14 மீட்டர் வரை கட்டிடத்தின் உயரத்தை அதிகரித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே போல தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம். 3 அடுக்கு மாடிகளுக்கு கட்டிடத்தின் உயரத்தை 6 அடி வரை உயர்த்தி கொள்வதன் மூலம் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்று கட்டுமானர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்கண்டிஷன், பால் சீலிங் போன்ற வசதிகள் செய்வதற்கு தரையில் இருந்து கட்டிடத்தின் உயரத்தை உயர்த்த இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது என்று கட்டுமான சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தென்னக கட்டுமான சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

    கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் கார் பார்க்கிங் வசதி நேர்த்தியாக செய்து கொடுக்க முடியும். தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. இது சொந்த வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

    மேலும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டரக்கு மிகாமல் உள்ள கட்டி டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்க முறை ஆணை யத்தின் நிறைவு சான்றி தழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் குடியிருப்புவீடுகள் 3-ல் இருந்து 8 வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவு சான்றிதழை சமர்பிக்காமல் எளிதாக பெறவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது.

    • கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரிய கூட்டம் முடிவின்படி ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூயம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் அரசு மணல் குவா ரிகளை அமைத்து மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சங்க நிர்வாகிகள் இளங்கோ, கருப்பண்ணன், மோகன், கோவிந்தராஜ், தேவி, செல்வ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணியை தடுத்து நிறுத்தினர்
    • , புதுவைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக போர்வெல் அமைக்கப் படுவதாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது

    நெட்டப்பாக்கம் அருகே பனையடிக்குப்பம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்க புதுவை அரசு பொதுப்பணித்துறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

    இன்று காலை அதற்காக பூமி பூஜை விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைக்க வந்தனர்.

    இந்த நிலையில் பனை யடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் ஊரில் ஏற்கனவே போர்வெல் இருப்பதாகவும், தற்பொழுது கூடுதல் போர்வேல் வேண்டாம் என்றும், புதுவைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக போர்வெல் அமைக்கப் படுவதாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பூமி பூஜையை பணி தடுத்து நிறுத்தினர். இதனால் பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கரையாம்புத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீ சார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் பொதுமக்கள் அனைவரும் போர்வெல் வேண்டாம் என்று எழுத்து பூர்வமாக அதிகாரியிடம் எழுதிக் கொடுத்ததின் பேரில் அதிகாரிகள் கலைந்து சென்றனர். இதனால் பனையடிக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தரும்படி ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தனது ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம், கழுவேரிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தரும்படி ஒன்றிய கவுன்சிலர் மோகனப்பிரியா குமரேசனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் .

    இதையடுத்து அவர் தனது ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அந்தப் பகுதிகளில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதைத்தொடர்ந்து குள்ளம்பாளையம், கழுவேரிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார்.
    • 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி 19-வது வார்டு பகுதியான மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார். பிறகு சர்ச் வீதியில் அடிப்படை வசதிகள் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த அவர் கூறுகையில், தாராபுரம் மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் தொடங்கப்பட்டு பணிகள் வெகு விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முழு முயற்சியுடன் செயல்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    அதே போன்று தாராபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.நாகராஜ், 19-வது வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.  

    • பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், திருக்காட்டு ப்பள்ளி மற்றும் அகரப்பே ட்டையில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், கூடநாணல் கிராமத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன் மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • வாலாஜா நகரத்தில் ரூ.2¾ கோடி மதிப்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வாலாஜாநகரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து அமைச்சர்சிவசங்கர் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.88.40 லட்சம் மதிப்பில் 104 உழவு எந்திரங்களையும், ரூ.1.44 லட்சம் மதிப்பில் 4 களையெடுக்கும் எந்திரங்களையும் வழங்கினார். இதேபோல் அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.31 லட்சம் மதிப்பில்18 உழவு எந்திரங்களையும்,37 களையெடுக்கும் எந்திரங்களையும் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து குறித்த கண்காட்சியினை பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக மாற்ற அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், அவர் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும் வழங்கினார்.

    15-வது மத்திய நிதி திட்டத்தின் சாலை நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     தாராபுரம், ஆக. 13-

    தாராபுரத்தில் புதிதாக 15-வது மத்திய நிதி திட்டத்தின் சாலை நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும், சாக்கடை ரூ. 22 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு சாக்கடை மற்றும் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர துணை செயலாளரும் கவுன்சிலருமான கண்ணன், நகர அவைத்தலைவர் கதிரவன் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
    • அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமுதாயக்கூடத்தில் பயின்று வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி யுள்ளது.

    அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமலேயே கடந்த 2022-23-ம் ஆண்டில் அங்கன் வாடி மையம் பராமரிப்பு செய்தல் என்ற பெயரில் 1.75 லட்சம் மதிப்பில் மராமத்து பணியும் செய்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.

    மேலும் பேவர் பிளாக் அமைத்தல் என்ற பெயரில் 4.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி முன்பு பேவர் பிளாக் அமைத்து சாலையும் அமைத்துள்ள ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகள் தற்போது சமுதாய கூடத்தில் உள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாக திறக்கப்ப டாமல் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் குழந்தை களை தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகா ரிகளிடம் பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தை களை சமுதாய கூடத்தில் தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள்,
    • பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதி கிரா மங்களில் விளை விக்கப்ப டும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வாழப்பாடியில் இயங்கும் தனியார் ஏல மண்டிகளிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யும் காய்கறிகளை , நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வாழப்பாடி யில் உழவர் சந்தை அமைக்க முன் வந்தது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வந்து செல்வதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வாழப்பாடியில் பல இடங்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்ட னர். இறுதியாக, வாழப்பாடி கிழக்கு பள்ளக்காடு பகுதி யில் கடலுார் சாலையில் தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு பாதை புறம்போக்கு நிலத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது.

    நிதி ஒதுக்கீடு

    இதற்கு வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை இசைவு தெரி வித்ததால், கட்டுமானப்பணி களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

    இதனையடுத்து, வாழப்பாடியில் உழவர் சந்தை கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கி யுள்ளது. இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உழவர் சந்தை அமைப்ப தற்கு வழிவகை செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

    எஸ்.ஆர்.சிவலிங்கம், வட்டார ஆத்மா குழு தலை வர் எஸ்.சி. சக்கரவர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மே கம், வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும், விவ சாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.  

    • 87-வது வார்டில் ரூ.83 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்தது.
    • ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 87-வது வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் தி.மு.க. கவுன்சிலர் காளிதாசிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக அவர் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் புதிய சாலை அமைக்க வலியுறுத்தினார்.

    இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் அரசு நிதியாக ரூ. 83 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி இன்று நாகம்மா கோவில் தெரு, சமயபுரம் கோவில் தெரு, அண்ணாமலையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் புதிய தார் சாலை அமைக்கும் பணி யினை 87-வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ் தொடங்கி வைத்தார். கவுன்சிலரின் முயற்சி யால் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதை வார்டு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப் பாளர் சுபாஷ் ஸ்ரீ மற்றும் ராஜா, சண்முகநாதன், ராம்ராஜ், சங்கர், பஞ்ச வர்ணம். மேகலா. செல்வி, ராஜா. ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் உள்ள சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    உடுலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆணடுக்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    காண்டூர் கால்வாய் அடர்வனப் பகுதி வழியாக வருவதால் மழைக்காலங்களில் பாறைகள் சரிந்தும் காரை உடைந்தும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கொண்ட அரசு காண்டூர் கால்வாயில் தரைத்தளம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக செய்து வருகிறது.

    தற்போது பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் பணிகள் முழு வீ ச்சில் நடைபெற்று வருகின்றன. நிர்ணிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் வேகமாக நடக்கின்றன.

    இதனால் இந்த மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×