கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறதுவீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.
கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

பவானி

பவானி அருகே உள்ள காடையாம்பட்டி முருகன் கோவில் வீதியில் வசிப்பவர் ஆனந்த் (21). கட்டிட தொழிலாளி.

மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆனந்தின் தாய் கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டின் கதவை சாத்திக்கொண்டு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அவர்கள் வந்து பார்த்த போது ஆனந்த் இறந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பவானி சப்இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த ஆனந்த் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com