search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் குமரகிரி மலை தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
    X

    கோவில் திருப்பணியை பா.ஜ.க. ஆன்மீக பிரிவு மாநில செயலாளர் சேலம்ஸ்ரீ பார்வையிட்ட காட்சி.

    சேலம் குமரகிரி மலை தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

    • கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை.
    • கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரகிரி மலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்வார்கள்.

    திருப்பணிகள்

    கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை. கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மலை மீதுள்ள குமரகிரி முருகனை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    இதனால் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சேலம் ஸ்ரீ ஆய்வு

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கோவில் திருப்பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் பணிகள் முடிய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் , கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த நாட்களில் அம்மாபேட்டை, உடையாபட்டி, பொன்னம் மாப்பேட்டை உட்பட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காவடி எடுத்து வந்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்வார்கள். திருப்பணிகள் காரணமாக திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது.

    வருகிற ஏப்ரல் மாதம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் இந்த கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதனால் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு செல்லும் மலை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×