என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிமெண்டு சாலை அமைத்து தர கோரிக்கை
- அபிராமம் அருகே சிமெண்டு சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம். அபிராமம் அருகே உள்ள உடையநாதபுரம், பள்ளபச்சேரி, அம்பேத்கார் நகர், ஏ. புதூர், அருந்ததியர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு சுமார் 140-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அம்பேத்கார் நகர் பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலைகளை சிமெண்டு சாலையாக மாற்றித் தர வேண்டும். தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தர வேண்டும். 2015-16-ம் நிதியாண்டில் கட்டப்பட்ட கழிவறை சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேலுவிடம் கேட்ட போது, இந்த பணிகளுக்கு ஏ.எஸ். கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்றார்.






