search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி பகுதியில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள் ஆய்வு
    X

    அகணி ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி ஆய்வு செய்தார்.

    சீர்காழி பகுதியில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள் ஆய்வு

    • அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா?
    • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த எருக்கூரில் உள்ள ரேசன் கடையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் கலெக்டர் லலிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ரேசன் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் மற்றும் அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்றும், அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப எடை அளவு சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி நிருபர்களிடம் கூறுகையில்:-

    முதல்-அமைச்சர் ஆலோசனைபடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாதம் ஒரு முறை எல்லா துறைகளிலும் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் விடுதி, ரேஷன்கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை களைந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் மணிகண்டன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் தாரா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×