search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Trouble"

  • தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல்.
  • தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும்.

  திருப்பதி:

  தெலுங்கானா மாநில 10-ம் ஆண்டு விழா வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

  புதிதாக ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்திற்கு தனியாக மாநில பாடல் உருவாக்கப்படும்.

  மாநில சின்னம், தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.

  பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இசையமைப்பாளர் கீரவாணி இசையில் ஜெய ஜெய ஹே தெலுங்கானா என்ற பாடல் தயாரானது. இந்த பாடல் மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.

  பாடலை தேர்வு செய்யும் கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

  புதிதாக தயாராகும் தெலுங்கானா மாநில சின்னத்தில் சார்மினார் மற்றும் காகதியா வளைவு அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இது தொடர்பான எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. மேலும் தெலுங்கானா அன்னை சிலையை மாற்றியமைப்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

  அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும்படி அரசு சின்னம் மற்றும் தெலுங்கானா அன்னை சிலை இருக்கும் வகையில் அரசு முடிவு எடுக்கும் என முதல் மந்திரி ரேவேந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார். 

  • ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களில் புகுந்து விடுகிறது.
  • இரு கரைகளிலும் காங்கிரட் சுவர் அமைக்க வேண்டும்.

  சீர்காழி:

  சீர்காழி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சீர்காழி பொதுத்துறை அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

  அதில் கூறியிப்பதாவது:

  சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவில் வரும்பொ ழுது பனமங்கலத்திலிருந்து சூரக்காடு வரை ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களிலும் நடவு செய்த வயல்க ளிலும் புகுந்து விடுகிறது.

  இதனால் பொதுமக்கள் விவசாயிகள் ஆண்டு தோறும் பாதிக்கப்ப டுகின்றனர்.

  இதனை தடுக்கும் வகையில் இரு கரைகளையும் பலப்படுத்தி கான்கிரீட் தளம் சிமெண்ட் பிளாக்குகள் அமைத்து கரையை பலப்படுத்தினால் ஆண்டு தோறும் கரைகள் உடைந்து விவசாயிகள், பொதுமக்க ளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம் மேலும் கரைகளில் டிராக்டர் அறுவடை இயந்திரங்கள் போன்ற வாகனங்கள் சென்றுவர ஏதுவாக இருக்கும் இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

  எனவே பொதுமக்கள் விவசாயிகள் நலன் கருதி உப்பனாற்றின் இரு கரைகளிலும் காங்கிரட் சுவர் அல்லது சிமெண்ட் பிளாக்குகள் அமைக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
  • போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  மதுக்கூர்:

  மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சியில் ஆதவற்ற நிலையில் மாரிமுத்து (வயது 70) என்பவர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்ப ட்டது, இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

  இவருடைய உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவருடைய உடலை உரிய இறுதி மரியாதைகளுடன் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது

  இதை அறிந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து முதியவரின் உடலை மனிதநேயத்துடன் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

  மதுக்கூர் போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த், தலைமை காவலர் சுரேஷ் மற்றும் திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவருமாகிய அண்ணாதுரை, ராஜேஷ் ஆகியோர் முதியோர் உடலை நல்லடக்கம் செய்தனர்.

  • கணவரை இழந்து வாழ்ந்தவர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா(வயது23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது பெற்றோ ருடன் வசித்து வந்தார்.

  அதே பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆறுமுகம் (வயது24). இவருக்கு திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று சங்கீதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா சத்தம் போட்டுள் ளார்.

  அவரது சத்தத்தை கேட்டு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் சங்கீதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

  • இணையதளங்களில் ஆபாசமாக வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

  மதுரை,

  மதுரை வில்லாபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

  அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணை வடிவேல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

  ஜாமீனில் வெளியே வந்த வடிவேல் தனக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை பழி தீர்க்க நினைத்தார். அதன்படி அந்த பெண்ணிடம் எனக்கு ேதவைப்படும்போது பணம் தரவேண்டும். இல்லையென்றால் உனது படத்தை ஆபாசமாக சித்திரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி வடிவேல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

  இதுகுறித்து அந்த பெண் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது.
  • வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

  நீடாமங்கலம்:

  தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விளங்கி வருகிறது.

  இத்திட்டத்தின்படி கொள்ளிடத்தில் இருந்து வேதாரண்யம் வரை குழாய் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முக்கிய பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து இராட்சத மின்மோட்டார் மூலம் நீரேற்றி தினசரி பல லட்சம் லிட்டர் தண்ணீர் பல லட்சம் குடும்பங்களை சென்றடைந்து வருகிறது.

  அந்த வகையில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருகருக்காவூர் பகுதியில் உள்ள நீரேற்றும் மையத்தில் இருந்து குழாய் மூலம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் சென்று வருகிறது.

  இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் வலங்கைமானில் இருந்து பாபநாசம் செல்லும் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம்.
  • தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை.

  திருப்பூர்:

  வணிக வரித்துறை சார்பில் பறக்கும் படை அமைத்துள்ளதால் தொழில் துறையினர் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையில் இருந்து வேறு தொழிற்சாலைக்கு ஜாப் ஒர்க் செய்ய பொருட்கள் எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  ஜி.எஸ்.டி., நடைமுறை அமல்படுத்திய பின், ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் நிறுவனங்களில், வணிக வரித்துறையினரின் நேரடி சோதனை முறை முற்றுப்பெற்றது.

  ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பில் இல்லாமல் வணிகம் இல்லை என்ற நிலை உருவானது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இம்முறையால் வரி விதிப்பில் இருந்த பல்வேறு சிக்கல்கள் தீர்வுக்கு வந்தன. இச்சூழலில், தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

  இப்படையினரால் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதனையிட்டு, அபராதம் விதிக்க முடியும். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும், 339 சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படையை வழிநடத்த, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  புதியதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையால், தொழில்துறையினர் மிரட்சியில் உள்ளனர். ஏனெனில், பொருட்களை தொழிற்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்ல ஜி.எஸ்.டி., பில் தேவை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ வே பில் தேவை. அவ்வாறு பில் இல்லாமல் பொருட்களை எடுத்துச் சென்றால், கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் விதிப்பால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் வைத்திருப்போர் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

  சிறிய தவறுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த, 15 நாட்களில் பல லட்சம் ரூபாய் அபராதமாகவும், முன் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர், ேகாவை தொழில்துறையினர் அதிருப்தியில் உள்ளனர். 

  • நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மனவேதனை.
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

  தஞ்சாவூர்:

  தஞ்சை சீதாநகர் சிவாஜி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

  இந்த நிலையில் அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மன வேதனை அடைந்தார்.

  சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது.
  • பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  நாகப்பட்டினம்:

  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் பூவைத்தேடி காமேஸ்வரம் வேட்டைக்காரன்இருப்பு, புதுப் பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது

  இந்த ஏ.டி.எம் சுமார் 3 மாத காலமாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் பணம் போடவும், எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

  மேலும் பணம் போடு வதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வங்கி நிர்வாகம் உடனடியாக ஏ.டி.எம்-யை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ×