விஷம் குடித்து சூப்பர்வைசர் தற்கொலை

நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மனவேதனை.உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
விஷம் குடித்து சூப்பர்வைசர் தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை சீதாநகர் சிவாஜி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மன வேதனை அடைந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com