வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கணவரை இழந்து வாழ்ந்தவர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா(வயது23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது பெற்றோ ருடன் வசித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆறுமுகம் (வயது24). இவருக்கு திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று சங்கீதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா சத்தம் போட்டுள் ளார்.

அவரது சத்தத்தை கேட்டு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் சங்கீதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com