இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை

இணையதளங்களில் ஆபாசமாக வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை
Published on

மதுரை,

மதுரை வில்லாபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணை வடிவேல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த வடிவேல் தனக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை பழி தீர்க்க நினைத்தார். அதன்படி அந்த பெண்ணிடம் எனக்கு ேதவைப்படும்போது பணம் தரவேண்டும். இல்லையென்றால் உனது படத்தை ஆபாசமாக சித்திரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி வடிவேல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com