என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judges"

    • மக்களை தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
    • சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தேர்தல் ஆணையம், ஆளும் மத்திய பாஜக அரசின் ஏவலின் பேரில் தேர்தலுக்கு முன்னனதாக அவசர அவசரமாக வாக்காளர்களை நீக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த எஸ்ஐஆர் பணிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், வாதாடியும் உள்ளார்.

    மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வங்காள மக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டார்.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மக்களைத் தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் முரண்பாடு என்ற பெயரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே போதிய ஒத்துழைப்பு மாநில அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது தரப்பில் தெரிவித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பான மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இரு மேற்கு வங்கம்அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை சுட்டிக்காட்டி அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.

    அதாவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான புகார்களை விசாரிக்க, தற்போதைய மற்றும் முன்னாள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை தேர்தல் பதிவு அதிகாரிகளாக நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நம்பிக்கை பற்றாக்குறையை ஒரு அசாதாரணமான சூழல் என்று கருதி உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 28 அன்று வெளியிடவும், விடுபட்டவர்கள், நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட பின்னர் துணைப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  

    • மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தெரிவித்தார்.
    • 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு மொத்தம் 8,639 புகார்கள் வந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.

    இதில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளன.

    உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்படும் இத்தகைய புகார்கள், நீதித்துறையின் உள்விவகார நடைமுறை மூலமாகவே கையாளப்படுகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

    • நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.
    • பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மக்களவையில் நீதிபதிகள் நியமனம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    அந்த பதிலில், "நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. ஆதலால் 2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டியலினத்தவர் 3.8% பேரும் பழங்குடியினர் 2.0% பேரும் ஓபிசி பிரிவில் 12.2% பேரும் சிறுபான்மையினர்கள் 5.5% பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

    • கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
    • ஜனாதிபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜய் விஷ்னோய், மும்பை ஐகோர்ட் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 26-ம் தேதி கொலீஜியம் பரிந்துரை செய்தது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் செய்த இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

    • மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
    • திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.

    மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.

    இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்தனர்.

    அப்போது, இஸ்லாமியர்கள் பலர் பக்தர்களுக்கு சாதி, மத பாகுபாடு இன்றி நீர், மோர், உணவு வழங்கினர்.

    இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை பாராட்டி நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கரூரில் பட்டியலின மக்கள் வழிபட பாகுபாடு காட்டியதாக எழுந்த புகார் மீதான வழக்கதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

    அதன்படி" வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில், எங்கும், எதிலும் சாதி பாகுபாடு கிடையாது.

    மதுரை சித்திரை திருவிழாவை போல, எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல், அனைத்து பகுதிகளிலும் விழா நடத்தலாமே.

    மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.

    திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.

    திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று குறிப்பிட்டனர்.

    • சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
    • 21 நீதிபதிகளின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

    நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முடிவு செய்தது. அதன்படி தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.

    சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருக்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.55.75 லட்சம் உள்ளது.

    தெற்கு டெல்லியில் 3 படுக்கை அறைகள் கொண்ட டி.டி.ஏ. பிளாட் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு (4 படுக்கை அறை) ஆகியவை அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது.

    மேலும், குர்கான், இமாச்சலபிரதேச வீடுகளில் பங்கும் இருக்கிறது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.1.06 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். 250 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி இருக்கிறது. 2015 மாருதி சுவிப்ட் கார் உள்ளது.

    அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பி.ஆர்.கவாய் வங்கி கணக்கில் ரூ.19.63 லட்சம் இருக்கிறது. மராட்டிய மாநிலம் அமராவதி, மும்பை பாந்த்ரா, டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது. ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கிறது.

    எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்.
    • சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர்.

    குறிப்பாக, அந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் தனது தீர்ப்பில் கூறினார்கள்.

    இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கவர்னர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்கி, ராகேஷ் திவேதி, வில்சன் எம்.பி. ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

    வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் சொத்து விபரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

    • மதுரை ஐகோர்ட்டில் 3 மாதங்களில் 6 ஆயிரத்து 300 வழக்குகளை நீதிபதிகள் விசாரித்தனர்.
    • இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு, பிரதான அமர்வாக இருந்து, பொது நல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிபதிகள், கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம்.

    இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறி ஞர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர்.

    • தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
    • பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.

    சர்வதேச தேக்வோண்டோ நடுவர் முகமது ஆஷிக் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி பட்டறையில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தை சேர்ந்தவர் சர்வதேச நடுவர் பரத்சிங், தேசிய நடுவர்களான பாலசுப்பிரமணியன், பஞ்சுநாதன், நந்தகுமார், சார்லஸ், கீர்தன், அரவிந்த் செல்வன், ஜெயசூர்யா, மதன் மற்றும் தஷ்னபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம்
    • ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது

    திருப்பூர் : 

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்ைன ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.நாகராஜன் கிருஷ்ணகிரி குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், காங்கயம் நீதிபதி பி.ராஜா வாணியம்பாடிக்கும், பல்லடம் நீதிபதி எஸ்.சந்தானகிருஷ்ணசாமி காங்கயத்திற்கும், காங்கயம் ஜூடிசியல் மாஜிஸ்திேரட்டு டி.பிரவீன் குமார் சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கும், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. ஆதியன் சங்கராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நீதிபதிகள் நியமனம் குறித்து புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார்.
    • புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உத்தரவு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. அதன்பின்னர், புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் அறிவித்தார்.

    இதையடுத்து, இரண்டு புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருந்தனர். அவர்களில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்திருந்தது. இன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.

    ×