சுகாதார பாதுகாப்பை இழக்கும் அமெரிக்கர்கள்: டிரம்பின் மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள் - ஒபாமா

மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது. 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
சுகாதார பாதுகாப்பை இழக்கும் அமெரிக்கர்கள்: டிரம்பின் மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள் - ஒபாமா
Published on

அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின்பு, நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்

இந்த மசோதாவை அவை நிறைவேறினால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகள் கடுமையாக பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com