என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "presidential election"
- அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
- 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார்.
மாலத்தீவு:
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.
இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார். அவர் தான் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.
சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.
மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.
- ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
- 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார். இவரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட வரிந்து கட்டி நிற்கின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர்.
மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
- சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது.
- மீண்டும் போட்டியிட போவதில்லை என தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிகிறது. தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவியது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில், இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
- தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தர்மன் சண்முக ரத்னத்தின் தாத்தா, பாட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள் தர்மன் 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். அவரது தந்தை கனகரத்தினம் மருத்துவ துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.
தர்மன் சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் அமைச்சராக பணியாற்றினார்.
தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார்.
- துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
- எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார்.
அங்காரா:
துருக்கியில் கடந்த 15-ந்தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.
துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28-ந்தேதி (இன்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு 20 ஆண்டுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் எர்டோகனுக்கு கடும் சவால் அளித்து வருகிறார்.
2003 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த எர்டோகன், அப்ப தவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமான அதிபர் பதவியை கொண்டு வந்தார். அவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
- துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.
- பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
மடத்துக்குளம்:
ஜனாதிபதி தேர்தலில் பாஜக. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதையடுத்து குடிமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார். இந் நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல தலைவர் பங்காரு நாராயணசாமி முன்னிலை வகித்தார்.மண்டல துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் மண்டல பொதுச் செயலாளர் யூ.மனோஜ்குமார், சந்திரசேகர், மண்டல செயலாளர் டி.சற்குணம், மாவட்ட பொறுப்பாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சிவக்குமார், நாகமாணிக்கம், மருதமுத்து, தீபன். அணிபிரிவுத் தலைவர்கள் சி.சந்துரு, மெய்யப்பன், ஆர்.பத்மநாதன், சண்முகசுந்தரம், ரவீந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், மகளிர் அணி மண்டல தலைவர் கே.கலாமணி, துணைத்தலைவர் பொ.சரண்யா, பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார்.
- இவர் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி ஆவார்.
புதுடெல்லி :
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி.
நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்த தேவை ஏற்பட்டால், ஜூலை 18-ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி தனது ஆளுமையை நிரூபிக்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்தது.
இதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்முவை (வயது 64) வேட்பாளராக களமிறக்கியது. அவரை ஆதரித்து பழங்குடியினருக்கு நியாயம் சேர்க்குமாறு எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொண்டது.
ஆனால் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் களமிறங்கிய எதிர்க்கட்சிகளோ, பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தன. இதற்காக பல்வேறு தலைவர்களின் பெயரை பரிசீலித்து, கடைசியில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை இறுதி செய்தன.
இந்திய ஜனாதிபதியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வதால், இந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை பெறுவதற்கு இரு அணியினரும் தீவிர களப்பணியாற்றினர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கிய திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இருவரும் மாநிலங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. எம்.பி.க்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க நாட்டின் 30 இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக இருந்த நிலையில், இதில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு நாடாளுமன்றத்தின் 63-ம் எண் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மேலும் சில கட்சிகள் என சுமார் 44 கட்சிகள் திரவுபதி முர்முவை ஆதரித்தன. அத்துடன் வாக்குப்பதிவின்போதும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சில எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அணி மாறி திரவுபதி முர்முவுக்கு வாக்களித்தனர். இதனால் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.
அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.
அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.
திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார்.
மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். 3-வது சுற்றிலேயே முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி ஆனது
- திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.
அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.
அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார்.
- 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவன் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார்.
திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றிருந்தனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலை பெற்றார்.
எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது. இதில் 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரவுபதி முர்மு ஏற்கனவே 5,77,777 வாக்குகளை (வாக்கு மதிப்பு) பெற்றுள்ளார். இது தேர்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை விட அதிகம் ஆகும். தற்போது 10 மாநில ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டபின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார்.