என் மலர்
நீங்கள் தேடியது "Elections"
- தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது.
- தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது
போபால்:
230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த மாதம் 17-ந்தேதி 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா வெளியிட்டு அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.
பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரசும் தயாராகிவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த ஆட்சி 2 ஆண்டு காலமே நீடித்தது. 2020-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது.
இதையடுத்து சிவராஜ் சிங் சவுதான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. தொடர்ந்து அக்கட்சி ஆட்சியில் நீடித்து வருகிறது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதியஜனதா உள்ளது.
அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் மலர வைப்பதில் அக்கட்சி தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதற்கு பலனாக சமீபத்தில் பல பாரதியஜனதா தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மறுபடியும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான ராஜேஷ் குப்தா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் சேர்ந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சில தலைவர்கள் விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பாரதியஜனதா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும், பாரதிய ஜனதா வெற்றிக்காக பாடுபடுவது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தலில் அறிவித்த 8 திட்டங்கள் நிறைவேறாமல் எட்டாக்கனியாக உள்ளது.
- இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.தி.மு.க.ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடியப்போ கிறது. ஆனால் கீழக்கரை நகராட்சியில் எந்த வளர்ச்சி, முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இது குறித்து கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். முதற்கட்டமாக கீழக்கரை நகருக்கு தரமான நவீன வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைத்து தருதல், மகளிருக்கு பல்வேறு வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மூலம் சொந்த கட்டிடத்தில் அமைத்து தருதல், கீழக்கரை நகரில் நவீன நூலகம், இளை ஞர்களுக்கு விளையாட்டு மைதானம், கீழக்கரைக்கு சுகாதார நலனை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்டம், நகரில் விரிவடைந்த பகுதிகளில் உடனடியாக தெரு விளக்கு, கீழக்கரையில் மின் கட்டணம் செலுத்தும் வசதியை நகருக்கு கொண்டு வருதல் ஆகிய 8 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், நகர் மன்ற சேர்மன் முன்வர வேண்டும். உடனடியாக பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 23-ந்தேதி நடக்கிறது என அறிவிக்கப்பட்டது
- 23-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 10 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 2 உறுப்பினர்களும், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வேட்பு மனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெற்று கொள்ளப்படும். கடந்த 7-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். 12-ந்தேதி காலை 11 மணியளவில் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 14-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 23-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். 28-ந்தேதி முதல் கூட்டம் நடைபெறும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும், என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.
- வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள்.
சென்னை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.
அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.
நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.
அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.
பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.
இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.
அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.
நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.
அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.
பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.
இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாகை சூடும் என்று மதுரையில் கவிஞர் சினேகன் பேசினார்.
- 6-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்தது.
மதுரை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்தது. இதில் மாநிலத் துணைத்தலைவர்கள் ஏ.ஜி. மவுரியா, தங்க வேல், நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாநில விவசாய அணி அமைப்பாளர் மயில்சாமி, இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன், மண்டல செயலாளர் அழகர், மாவட்ட செய லாளர்கள் மணி, கதிரேசன், சரவணன், மண்டல அமைப்பாளர்கள் முத்துகிருஷ் ணன், நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவிஞர் சினேகன் பேசியதாவது:-
தமிழக அரசியலின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் முயற்சியில் கமலஹாசன் ஈடுபட்டு வருகிறார். இதற்கான பணிகளில் நாங்கள் கடந்த 6 ஆண்டு களாக நெருப்பாற்றை நீந்தி கடந்து வந்து உள்ளோம். தமிழகத்தில் இன்றைக்கு மக்கள் நீதி மய்யம் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேச ஒற்றுமைக்காக பாதயாத்திரை சென்றார். அப்போது அவருக்கு கூட்டணி கட்சிகளே கை கொடுக்க யோசித்தது.
அந்த நிலையில் தலைவர் கமலஹாசன் தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுத்தார். புது டெல்லி பாதயாத்திரையில் உடன் ஒன்றாக கலந்து கொண்டார். ராகுல் காந்தியின் எம்.பி பதவி இன்றைக்கு பறிக்கப்பட்டு உள்ளது.
இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி ஆகும். இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்தால் மக்கள் நீதி மய்யம் தான் முதலாவதாக குரல் கொடுக்கும்.
அந்த வகையில் எங்கள் தலைவர் கமலஹாசன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற பொது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி வாகை சூடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பேச வேண்டிய அவசியமில்லை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேர் எதிர்த்து, மத்தியஅரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது எதிர்பார்த்த ஒன்றுதான். இது அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. அந்த 6 பேர் சார்பிலும் வககீல்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி சட்டப்படி எதர்கொள்ளப்படும். இதனால் 6 பேரின் விடுதலை ரத்து செய்யப்படாது என நம்புகிறோம்.
த மிழக அரசின் மழைக்கால நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசலாம். இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.
மத்திய அரசு பிடிவாதம்
திருமாந்துறை, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளின் ஊழியர்களின் போராட்டம் குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மத்திய இைண மந்திரியிடம் மனு கொடுத்திருக்கிறோம். கூட்டத் தொடரின்போது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து பேச உள்ளோம்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், வழக்கில் இருந்து வெளியே வர முடியாதபடி வழக்கை விரைந்து நடத்தி தண்டணை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.
மத்திய அரசு நீட் தேர்வு விசயத்தில் பிடிவாதமாக உள்ளது, மாநில அரசு ஒன்றுக்கு இருமுறை சட்ட மசோதா அனுப்பியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிக்கு தேவையான நிதி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி போதவில்லை இருந்தாலும் தமிழக அரசு மூலம் வலியுறுத்தி அடிப்படை வசதி செய்து தருவேன்.
- நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது
- ஆலங்குடி தாலுகாவில் நாளை நடக்கிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட் சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 48 ஊராட்சிகளில் பாசன பகுதிகளான அக்கினி ஆறு, அம்புலி ஆறு தெற்கு வெள்ளாறு என மொத்தம் 2812 ஹெக்டர் நீர் பாசன வசதி உள்ளது. பாசன குளங்கள் மற்றும் ஏரிகளில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் 34 சங்கங்கள் உள்ளது. பாசன குளங்களை இணைத்து நீரினை பயன்படுத்துவோர் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த சங்கங்களுக்கு தலா ஒரு தலைவர் என 34 தலைவர் மற்றும் 91 ஆட்சி மண்டல குழு உறுப்பினர் பதவிகள் மொத்தம் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மனு வாபஸ், தள்ளுபடி, போட்டியின்றி தேர்வு போக மீதம் 9 இடங்களுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். பொது தேர்தலை மிஞ்சும் வகையில் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. இந் த தேர்தலில் விவசாயிகள் வாக்காளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி 9 இடங் களில் நடக்கும் தேர்தலை யொட்டி பள்ளிகளில்அனைத்து வசதிகளும் இருக்கிறதா என மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா- புஷ்பராஜ் முன்னிலையில் ஆய்வுமேற்கொண்டார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
- வரும் தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
- கரூரில் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார்
கரூர்:
2024 மற்றும் 2026ம் ஆண்டு தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக திகழும்
என விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட விஜயபிரபாகரன் பேசியதாவது:
ஒரு ஓட்டுநர் வேலைக்குக்கூட தகுதி, திறமை குறித்த ஆலோசித்த பிறகு பணியை வழங்குகின்றனர். நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு என்ன அனுபவம், தகுதி, திறமை உள்ளது என்பதை மக்கள் ஆராய்ந்து பார்த்து அரசியலில் வாய்ப்பு வழங்கவேண்டும். சாதாரண தொண்டனாக உங்கள் முன்னால் நிற்பதற்கு தயாராக இருக்கிறேன். நீங்கள் சரியான நபர் யார் என்று சிந்தித்து அவர்கள் பின்னால் நிற்கவேண்டும்.
வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தல், வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணியே வெற்றிப்பெறும் நிலையை நீங்கள் ஏற்படுத்தவேண்டும். இத்தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்றார்.
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokSabhaElections2019 #Vellore
பா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதர்ராவ் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின்போது தேசத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தேர்தலில் பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் வெற்றி அதிகமாக இருக்கும்.
காங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
தேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

தேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது. இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.
நாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உடன் இருந்தார். #LokSabhaElections2019 #MuralidharRao