search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 திட்டங்கள் நிறைவேறாமல் எட்டாக்கனியாக உள்ளது-பொதுமக்கள் குமுறல்
    X

    8 திட்டங்கள் நிறைவேறாமல் எட்டாக்கனியாக உள்ளது-பொதுமக்கள் குமுறல்

    • கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தலில் அறிவித்த 8 திட்டங்கள் நிறைவேறாமல் எட்டாக்கனியாக உள்ளது.
    • இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.தி.மு.க.ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடியப்போ கிறது. ஆனால் கீழக்கரை நகராட்சியில் எந்த வளர்ச்சி, முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

    இது குறித்து கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். முதற்கட்டமாக கீழக்கரை நகருக்கு தரமான நவீன வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைத்து தருதல், மகளிருக்கு பல்வேறு வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மூலம் சொந்த கட்டிடத்தில் அமைத்து தருதல், கீழக்கரை நகரில் நவீன நூலகம், இளை ஞர்களுக்கு விளையாட்டு மைதானம், கீழக்கரைக்கு சுகாதார நலனை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்டம், நகரில் விரிவடைந்த பகுதிகளில் உடனடியாக தெரு விளக்கு, கீழக்கரையில் மின் கட்டணம் செலுத்தும் வசதியை நகருக்கு கொண்டு வருதல் ஆகிய 8 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், நகர் மன்ற சேர்மன் முன்வர வேண்டும். உடனடியாக பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×