என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    X

    வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    • பீகார் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு

    பீகாா் சட்டசபை தோ்தல் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் கீழ், தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால், பீகாரில் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவா்கள், தாங்கள் இந்தியாவை சோ்ந்தவா்கள் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட பலர் பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.

    இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜரானார். பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    அதே நேரம் இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. வருகிற 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மனுக்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கபில்சிபல் வலியுறுத்தினார். ஜூலை 10 ஆம் தேதி நாங்கள் அதை பரிசீலிப்போம் என்று நீதிபதி துலியா தெரிவித்தார்.

    Next Story
    ×