என் மலர்
நீங்கள் தேடியது "Victory"
- தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
- தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வாக உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சாண்டி உம்மன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார்.
- சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் கைலாசநாதர் கோவிலில் சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிலின் சபா மண்டபத்தில் இந்தியா வடிவத்தில் விளக்கு கள் மற்றும் புஷ்பங்கள் அலங்கரிக்கப்பட்டது. சரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார். முதன்மைச் செயலாளர் மனோகரன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சந்திரயான் வெற்றிக்கும் இதற்காக பாடு பட்ட விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
பின்னர் சுகந்த குந்தலாம்பிகை மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.
- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
- கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
காரியாபட்டி
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மல்லாங்கிணறில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசிய தாவது:-
விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி பாக முக வர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாத புரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து தி.மு.க. சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய செய லாளர்கள் காரியாபட்டி செல்லம், கண்ணன், நரிக்குடி போஸ் தேவர், கண்ணன், திருச்சுழி சந்தன பாண்டியன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சி லர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, சந்திரன், முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டி யன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
- தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர்:
வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வடலூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி?
- பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்- நாகை சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார்.
நாகை மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்க தலைவர் வைரவமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டு வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பேசினார்.
முன்னதாக தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன், நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளார் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முடிவில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள்.
- பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அலோசியஸ், தலைமை காவலர்கள் சீனிவாசன், ரஞ்சனி பிரியா, செந்தமிழ்ச்செல்வி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார். முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகளும் வழங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி பேசுகையில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.
முடிவில் ஆசிரியர் இன்பாலன் நன்றி கூறினார்.
- 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
- வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.
மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன். போட்டியில் வெற்றி பெற்று 60 மாணவ-மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.
- மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம்.
- மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேய படையினரிடம் தோல்வி அடைந்தார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா சுற்றுலாத்தலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வாரவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி மரபுச் சின்னங்களை கட்டணம் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம். வாட்டலூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேயப் படையினரிடம் தோல்வி அடைந்தார்.
நெப்போலியன் தோல்வியை வெளியுலகுக்கு தெரிவிக்கவும், ஆங்கிலேயரின் வெற்றியை கொண்டாடியும், 2-ம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனோரா என்னும் நினைவுச்சின்னம். மாணவர்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தியநாதன், சாரண ஆசிரியர் முத்துச்சாமி, காரைக்குடி பட்டாலியன் ஹவில்தார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மனோராவில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
- 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
- 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.
பேராவூரணி:
பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.
இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
- தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.
கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் 240 டிஎம்சி காவிரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
காவிரி நீர் வீணாவதைத் தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மதுரவாயல் பகுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அறிக்கிறது.
மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேசமயம் தமிழகத்தில்தான் நீட் தேர்வால் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.
அப்போது, பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் மற்றும் விமல், காமராஜ், லண்டன் அன்பழகன் உட்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.