search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by election"

    • வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

    ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால், வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில் கடந்த ஜூலை 29ம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும், 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

    அதன்படி, வயநாட்டில் இயற்கை பேரிடம் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
    • 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், தமிழகத்தில் இடைத்தேரத்லில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

    மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது.

    சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.

    விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம்.

    நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது.

    'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

    தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள்.

    பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

    விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

    திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.

    நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் பயணத்தையும் தொடர்கிறோம். வெற்றிப் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.

    இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. இது இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.

    மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. இது இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.

    மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்த தேர்தலில் உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் உட்பட பல புதுமுகங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

    • விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.
    • நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து முதல்வர் செய்து வருகிறார்.

    தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல பெட்ரோல், பால் விலையை குறைத்தார்.

    பெண்களுக்கான விடியல் பணயத்திட்டத்தில் 500 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விடியல் பயணத்திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத்திட்டத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

    31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப்பின் செயல்படுத்தப்படும். விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.

    நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும்.

    அன்னியூர் சிவாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
    • மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சன்னப்பட்டினம் தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.

    இதையடுத்து சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே இந்த தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

    இதையடுத்து இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும், பெங்களூரு ஊரக தொகுதி எம்.பி. டாக்டர் சி.என். மஞ்சுநாத்தின் மனைவியுமான அனசுயா போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நடந்து முடிந்த தேர்தலில் அவர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். மேலும் பிரசாரத்தின் போது அவர் வகுத்த வியூகம் ஆகியவை வெற்றிக்கு கை கொடுத்தது. இதையடுத்து அனசுயா வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

    • விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை.
    • உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சென்னையை சேர்ந்த மருத்துவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் தனது தந்தையின் இடத்தை விற்பனை செய்து, பணத்தை சென்னை எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

    விக்கிரவாண்டி வழியாக பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    • இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.

    இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    பா.ம.க.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார்.
    • 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.

    ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு என்று சொல்லத்தக்க அளவில் தேர்தல் நடந்தது.

    ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறது.

    ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகி விடும்.

    சசிகலா அ.தி.மு.க.வினரை ஒன்று சேர்க்க போவதாக கூறுகிறார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உங்கள் மூலமாக நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்புதாக கூறுகிறீர்களே? அப்படி புறக்கணிக்கிறது என்றால் அக்கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. அதை அவரால் சொல்ல முடியுமா? நாங்களும் ஒரு கணக்கு எடுக்க போகிறோம்.

    தேர்தலில் அன்றைய தினம் யார்-யார் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஏஜெண்டுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? என்று கணக்கெடுப்போம்.

    அப்படி அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம்.

    எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கட்சிக்கு சொல்லி விட்டு அதையும் மீறி கட்சிக்காரர்கள் ஓட்டு போட்டால் என்ன செய்வீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன். நடவடிக்கை எடுப்பேன் என சொல்ல எடப்பாடி பழனிசாமி தயாரா? ஆனால் அவர் அப்படி சொல்ல மாட்டார்.

    ஏதோ அவர் பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார். ஆனால் எதையும் சந்திக்கிற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது.

    காரணம் வன்னிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் செய்தது போல வேறு யாரும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். இதன் மூலம் எத்தனை பேர் டாக்டர் ஆனார்கள். என்ஜினீயர்கள் ஆனார்கள்.

    குரூப்-1 தேர்வு எழுதி பணியாற்றி அதன்பிறகு ஐ.ஏ.எஸ். ஆனார்கள். இதையெல்லாம் அங்குள்ள மக்கள் மறந்திடுவார்களா என்ன?

    ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வரும் நிகழ்வு தாய்மார்கள் எப்படி நன்றி உணர்வோடு வாக்களித்து வெற்றிபெற செய்தார்களோ அதேபோல் வன்னிய பெருமக்கள் இந்த ஆட்சியின் மூலமாக 20 சதவீதத்தால்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து ஆயிரம் ராமதாஸ் சொன்னாலும், மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்த வன்னியர்கள் அத்தனை பேரும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    எங்களுக்கு விக்கிரவாண்டியில் அடித்தளம் நன்றாக உள்ளது. நிர்வாகிகள் எழுச்சியோடு உள்ளனர். கூட்டணியும் ஒன்றாக உள்ளது. போன தேர்தலில் ஒரு சின்னத்தில் ஓட்டு கேட்டு விட்டு இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்தில் ஓட்டு கேட்டால் அவர்களை மதிப்பார்களா? எங்களுக்கு அப்படி இல்லை.

    தி.மு.க. 2019-ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க.தான். ஆனால் இப்போது அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதனால் புறக்கணிப்பதாக கூறுவதற்கு தோல்வி பயம் மட்டுமின்றி வேறு காரணமும் உள்ளது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.
    • அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார்.

    இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

    இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    ×