என் மலர்
நீங்கள் தேடியது "Wrestlers"
- அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வென்றனர்.
- 5 பிரிவில் தங்கப் பதக்கம் கிடைத்தது.
23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.
பிரியான்ஷி பிரஜாபாத் (50கி), ரீனா (55கி), ஸ்ரீஷ்டி (68கி), பிரியா (76கி) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
நேஹா ஷர்மா (57கி), தன்வி (59), பிரகதி (62கி), சிக்ஷா (65) , ஜோதி பென்வால் (72கி) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஹினாபென் கலிஃபா (53கி) வெண்கல பதக்கம் வென்றார்.
கிரேக்கோ-ரோமன் பிரிவில் சுமித் (63கி) தங்கப் பதக்கம் வென்றார். நிதேஷ் (97), அங்கித் குலியா (72கி) வெண்கல பதக்கம் வென்றனர்.
ஃப்ரீஸ்டைல் பிரிவில் விக்கி (97கி) தங்கப் பதக்கம் வென்றார்.
நிகில் (61கி), சுஜீத் கல்கல் (65கி), ஜெய்தீப் (74கி) சந்தர்மோகன் (79கி), சச்சின் (92கி) தங்கப் பதக்கத்திற்காக மோத உள்ளனர்.
- பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர் பஞ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜக தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வேண்டும் என மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடி வந்தனர்.
நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் தீவிரமடைந்த சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் பெற்றது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் டெல்லி போலீசார், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிந்தனர்.
புகார்தாரர்களில் ஒருவர் மைனர் பெண் என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி காவல்துறை, ஆறு மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, ஒரு மைனர் பெண் சம்பந்தப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
இதனால் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கைத் தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மல்யுத்த வீரர் பஞ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "போக்சோ குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பிரிஜ் பூஷன் சிங் ஒரு ரோடு ஷோ நடத்தி அதை தனது வெற்றியை காட்டுகிறார், அதே நேரத்தில் 6 பெண் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.
மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியபோது, பிரிஜ் பூஷனின் அழுத்தத்தின் காரணமாக, மைனர் மல்யுத்த வீரரங்களை பின்வாங்கினார். ஆனால் அவர் ஏற்கனவே ஒரு முறை நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார். மற்ற ஆறு பெண் மல்யுத்த வீரர்கள் மீதும் தன் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு பிரிஜ் பூஷண் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அவ்வாறு அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் அவர் தனது அதிகாரத்தை வெளிப்படுத்த மற்றொரு ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருக்கலாம். சில சமயங்களில், சட்டத்தின் ஆட்சி குண்டர்களால் தாழ்ந்து வருவதாக நான் உணர்கிறேன்"
இந்த பதிவை பகிர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினேஷ் போகத், "போலீஸ் உங்களுடையது, தலைவர் உங்களுடையர், நீங்கள் பொய்யை உண்மையாக வெளியிடுகிறீர்கள், செய்தித்தாள் உங்களுடையது, உங்களுக்கு எதிராக எங்கே புகார் செய்வது, அரசாங்கம் உங்களுடையது, ஆளுநரும் உங்களுடையர்!!" என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் டெல்லி போலீசார், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிந்தனர்.
- தனது மகள் பொய் கூறிவிட்டதாக தந்தை தெரிவித்தார்.
பாஜக தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வேண்டும் என மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடி வந்தனர்.
நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் தீவிரமடைந்த சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் பெற்றது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் டெல்லி போலீசார், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிந்தனர்.
புகார்தாரர்களில் ஒருவர் மைனர் பெண் என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி காவல்துறை, ஆறு மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, ஒரு மைனர் பெண் சம்பந்தப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
போக்சோ வழக்கில் மைனர் பெண் மற்றும் அவரது தந்தை அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யுமாறு டெல்லி காவல்துறை நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.
பின்னர் நீதிமன்றம், காவல்துறை அறிக்கைக்குப் பதிலளிக்கக் கோரி, மைனர் பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
ஆகஸ்ட் 2023 இல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள் காவல்துறை அறிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தனது மகள் பொய் கூறிவிட்டதாக தந்தை தெரிவித்தார். இதனால் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கைத் தள்ளுபடி செய்து நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில் தனது தந்தைக்கு எதிரான மீதமுள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும் பிரிஜ் பூஷனின் மகன் பிரதீக் பூஷண் சிங் தெரிவித்தார்.
- புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாஜக தலைவர் பபிதா போகத் உறுதி அளித்தார்.
- மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
புதுடெல்லி:
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பிருந்தா காரத், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது, இந்த போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றுகூறி அவரை அங்கிருந்து செல்லும்படி கைகூப்பி கேட்டுக்கொண்டனர்.
"தயவுசெய்து மேடையில் இருந்து கீழே இறங்குங்கள். தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம்" என பஜ்ரங் புனியா கேட்டுக்கொண்டார்.
இதுபற்றி பேசிய பிருந்தா காரத், "மல்யுத்த வீரர்கள் இங்கு தர்ணா போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும். விசாரணை முடிவடையும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்றார்.
- மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
- மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவத் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
- மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.
- இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் நேற்று நள்ளிரவு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.
கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அதற்கான பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு 4 வாரங்களுக்குள் விசாரணையை முடித்துவிடும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது சுமத்தப்பட்ட நிதி அல்லது பாலியல் துன்புறுத்தல் என அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இது முழுமையாக விசாரிக்கும்.
விசாரணை முடியும் வரை அவர் (சிங்) ஒதுங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பார். மேற்பார்வைக் குழு மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட விவகாரங்களை நடத்தும் என மந்திரி அனுராக் தாக்கூர் உறுதி அளித்தார்.
- திமுக எம்.பி. அப்துல்லா ஜந்தர் மந்தர் சென்று திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.
- போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக எம்.பி. அப்துல்லா இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 9வது நாளாக நீடிக்கிறது.
- பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோண்டா:
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி., இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது. பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
போராட்டம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அனைத்து மல்யுத்த நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் மல்யுத்த செயல்பாடுகளை நிறுத்தக்கூடாது என சொல்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா என யார் ஏற்பாடு செய்தாலும், போட்டிகளை நடத்த அனுமதிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 7ம் தேதி மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அந்த தேர்தலை விளையாட்டு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கும், மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்கும் ஒரு தற்காலிக குழுவை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுமா ஷிரூர், இந்திய வுஷூ சங்க தலைவர் பூபேந்திர சிங் பஜ்வா ஆகியோர் கொண்ட தற்காலிக குழுவை ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
போட்டிகளை யார் நடத்தினாலும் மல்யுத்த கூட்டமைப்புக்கு பிரச்சனையில்லை, வழக்கம்போல் போட்டிகளை நடத்தவேண்டும் என்று மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் சங்கம் மற்றும் அரசாங்கத்தை பிரிஜ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில் மல்யுத்த கூட்டமைப்பு அதற்கான ஏற்பாட்டை செய்யமுடியும் என்றார்.
- பாராளுமன்றம் அருகே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டம்.
- பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இன்று பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.
பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர்.
அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
- பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்த முயன்றனர்.
- மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதை ஒட்டி போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தடையை மீறி பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களாலும், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பாலும் நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது.
பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகளின் குரலை அரசு இரக்கமின்றி மிதித்து வருகிறது.
இது முற்றிலும் தவறு. அரசின் திமிரையும், அநீதியையும் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மல்யுத்த வீரர்கள் சட்டம் ஒழுங்கை மீறியதாக போலீசார் கைது செய்தனர்.
மும்பை :
இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் முன்னாள் தலைவர் பிரிஷ் பூஷன் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை போலீசார் சட்டம் ஒழுங்கை மீறியதாக கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
மத்திய உள்துறை அமைச்சகம் தான் வீரர்கள் மீது இந்த அத்துமீறலை மேற்கொள்ள அனுமதி வழங்கியதா?. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்படி இழிவாக நடத்தப்படுவதை கண்டு நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். விளையாட்டுகளின் மூலம் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் நீதிக்காக இதுபோன்ற போராட்டங்களை நடத்த நிர்ப்பந்திக்கப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. அனைவராலும் பாராட்டப்பட்ட வெற்றியாளர்கள் திடீரென தங்களுக்கு நீதி கேட்கும்போது வில்லன்களாகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறுகையில், "மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அவர்களே, எங்கள் பெண் மல்யுத்த வீரர்கள், அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பாருங்கள். நீங்கள் இந்தியாவின் பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி, இவர்களை பாதுகாப்பதும், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதும் உங்களின் கடமையல்லவா. இதை விட்டுவிட்டு ராகுல் காந்தி தொடர்பான பிரச்சினைகளில் மட்டுமே நீங்கள் பேசுவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
- அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.
இதனையடுத்து பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவெடுத்துள்ளனர்.
மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.






