search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது- எதிர்க்கட்சிகள் கண்டனம்
    X

    பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது- எதிர்க்கட்சிகள் கண்டனம்

    • பாராளுமன்றம் அருகே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டம்.
    • பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர்.

    பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.

    பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர்.

    அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×