search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு- 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு
    X

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்-வீராங்கனைகள்

    மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு- 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு

    • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவத் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    முன்னதாக, மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

    Next Story
    ×