என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pocso case"
- சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது.
- கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 21-ந் தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் அந்த சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது. அந்த வாலிபர் சிறுமியை காரில் ஏறுமாறு கூறியுள்ளார்.
அதை நம்பி காரில் ஏறிய சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு கடத்தி சென்று அந்த வாலிபரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் 4 வாலிபர்கள் மீதும் கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22), இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் அனைத்து மகளிர் போலீசார் ஹரிகரன் மீது போக்சோ வ ழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
- ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.
- ஒரு நாளைக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.
கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 2ஆயிரத்து 234 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 833 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் அடங்கும். மேலும் 8 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 944 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
- பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, பொதுமக்க ளிடமிருந்து மொத்தம் 24 மனுக்களை பெற்று கொண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்சோ வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்ட ஆற்காடு, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் விநாயகமூர்த்தி, ஆனந்தன், ஷாகீன், வாசுகிபோலீஸ் ஏட்டுகள் முத்துராணி, பிரேமா ஆகியோரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
- இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி அருகே உள்ள மாரனேரி திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). திருமணம் ஆகவில்லை. இவர் விறகு வெட்டும் வேலைக்கு சென்று வந்தார். 2022-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி டியூசன் சென்ற 5-ம் வகுப்பு மாணவிக்கு பாண்டியராஜன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பாண்டியராஜனுக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
- 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன் கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் வந்தது.
- திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 36) .கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சொந்த ஊராக கொண்ட இவர் கடந்த 12.4.2013ம் தேதி போயம்பாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன் கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் வந்தது. புகாரின் பேரில் தண்டாயுதபாணி வடக்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தண்டாயுதபாணி குற்றம் செய்ததை புலன் விசாரணையில் கண்டறிந்த போலீசார் மேல்முறையீடு செய்து வழக்கினை நடத்திட முடிவு செய்தனர். அதன்படி போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடந்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த தண்டபாணியை தீர்ப்பு நாளான நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதில் தண்டாயுதபாணிக்கு போக்சோ குற்றத்திற்கு 10 வருடமும், கொலை முயற்சிக்கு 10 வருடமும் மற்றும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததற்கு 7 வருடமும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தண்டனை அளிக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 10.5 லட்சம் கொடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் உதவி ஆணையர் அனில்குமார், கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் கலாவதி மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் பாராட்டினார்.குற்றவாளி இவர் தான் என்பதை உறுதி செய்த நிலையில், உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி போலீசார் தண்டனை பெற்றுதந்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.
- ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
- பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும்.
தாராபுரம் :
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பது தான் போக்சோ சட்டம். குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான்.
குழந்தைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. அது பெற்றோர், உறவினர், ஆசிரியர், மருத்துவர், காவலர் என அனைவருக்கும் பொருந்தும்.போக்சோ சட்டம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இரு பாலினருக்கும் பொருந்தும். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குறித்தான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய தாமதம் கூடாது என போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு தகுந்த அறிவுரை வழங்கி வருகின்றனர். கணவன், மனைவி பிரிந்த நிலையில் கவனிக்க, வளர்க்க ஆளில்லாத சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.பெரும்பாலான வழக்குகளில் இரண்டாவது தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.
குழந்தை வன்முறை குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளதாவது :- குழந்தைகளை தவறான வார்த்தைகளால் பேசுதல், குழந்தைகளை பாதிக்கும் கேலி, கிண்டல் செய்தல், ஆபாச படங்கள் காண்பிப்பது, பேசுவது, குழந்தை விரும்பத்தகாதவாறு உடல் பாகங்களை தொடுதல், குழந்தையின் தன்னம்பிக்கையை இழக்க செய்தல், தன் கோபத்தை தணிக்க குழந்தை மீது தீங்கிழைத்தல், குழந்தையை தன் வயப்படுத்தல், வேலையாளாக பயன்படுத்துவது, கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது, உணர்வுகளை புறக்கணித்தல், பள்ளியில் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாக்குவது, மருத்துவ தேவைகளை புறக்கணித்தல், கல்வியின் அவசியத்தை புறக்கணித்தல், கண்காணிப்பு இல்லாமல் விட்டு விடுதல் ஆகியவை குழந்தை வன்முறை என வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் கூறுகையில், ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு இது தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன. அதை உடனடியாக பதிவு செய்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு குழந்தைகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. போக்சோ உதவி பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
- இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறி உள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- கடந்த 2016-ம் ஆண்டு சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணத்திற்காக வாலிபர் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
- வாலிபருக்கு 40 ஆண்டு சிறையும், உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத்(32). சாமியார்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மனைவி கவிதா(37). இவர்கள் 2 பேரும் ஒரே இடத்தில் கட்டிட பணி செய்து வந்தனர்.
இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணத்திற்காக வினோத் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு கவிதாவும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வினோத் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் கவிதாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார்.
வினோத் மீதான குற்றங்கள் உறுதியானதால் அவருக்கு 40 ஆண்டு சிறை மற்றும் ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அபராத தொகையான ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என்றும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.