என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher arrested"

    • விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது.

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு(வயது20). இவர், மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில், என்ஜினீயரிங் கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த விஷ்ணு, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அங்கு வந்த போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    போலீசார் பள்ளி வளாகத்தை சுற்றி பார்வையிட்டபோது அங்குள்ள சுவரில் 'என் சாவுக்கு காரணம் பாபு' என எழுதப்பட்டு இருந்தது. இதை விஷ்ணு எழுதி வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    பெயரின் முன்பு 'J ' என்ற இன்ஷியலும் எழுதப்பட்டு இருந்தது. இதை வைத்து போலீசார் யார் அந்த பாபு? என விசாரித்தபோது, பாபு அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கல்லூரி மாணவர் விஷ்ணு மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பாபுவை போலீசார் கைது செய்தனர்.

    கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரசு பள்ளி ஆசிரியர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

    தனது உயிரிழப்புக்கு ஆசிரியர் தான் காரணம் என உயிரிழந்த கல்லூரி மாணவர் விஷ்ணு சட்டை பையில் கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் வகுப்பறையில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் வகுப்புக்கு வந்தாலே மாணவிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் வகுப்பறை மற்றும் குடியிருப்புகளில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.

    இதனையடுத்து மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்ததால் ஆங்கில ஆசிரியர் ரஞ்சித்குமார் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • சாபம் விட்டு விடுவேன் என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் அலகோடு உதயகிரி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி. அந்த பகுதியில் உள்ள மதரசா ஒன்றில் ஆசிரியராக இருந்துவந்த அவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 2020-2021 ஆண்டுகளில் மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தபடி இருந்திருக்கிறார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால், "சாபம் விட்டு விடுவேன்" என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.

    இதுகுறித்து பழையங்காடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முகமது ரபி மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கேரளா தளிப்பரம்பா போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ், குற்றம் சாட்டப்பட்ட முகமது ரபிக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.9 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முகமதுரபியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    போக்சோ வழக்கில் 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முகமது ரபி, இதற்கு முன்பு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 26 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்து வந்த நிலையில் தான், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.

    மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.

    பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.

    இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர்.
    • மாணவன் சொன்ன தகவல் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    திருவனந்தபுரம்:

    நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியை, வேலியே பயிரை மேய்ந்த கதையாக டியூசனுக்கு வந்த மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டுள்ளான். சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள தேர்வுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான்.

    சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்த மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர்.

    அப்போது மாணவன் சொன்ன தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கடந்த சில நாட்களாக மாணவன், ஒரு ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றுள்ளான். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, அதனை மறந்து மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.

    மாணவன் கூறிய தகவலைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மண்ணுத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர்.

    • குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்தியது.

    அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பைசல் மேச்சேரி மீது மாணவிகள் 5 பேர் புகார் கூறினர். அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பைசல் மேச்சேரியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    இதில் ஆசிரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதனையறிந்த ஆசிரியர் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார்.
    • கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேல பொன் பேற்றியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் செண்டரையும் நடத்தி வந்தார். இந்நிலையில் அப்பள்ளி யில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூஷன் செண்டருக்குப் போன மாணவியிடம் ஆசிரி யர் கணேஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணேஷ்குமார் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, நெடுங்காடு போலீசார் கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இந்த நிலையில் கும்ப கோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஆசிரியர் கணேஷ்குமார் தலைமறை வாக இருந்தது போலீ சாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நெடுங்காடு சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் விரைந்து சென்று ஆசிரியர் கணேஷ் குமாரை கைது செய்தனர்.

    • மாணவியை ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
    • குற்றத்துக்கு உடந்தையாக இருந்த நண்பர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அந்த பள்ளியில் பணியாற்றும் 33 வயது ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த மாணவி கடந்த மாதம் 26-ந்தேதி நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பேசியபோது, பெண் குழந்தையை காப்பாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி இருந்தார். அவரது பேச்சை பலரும் பாராட்டியதால் அந்த மாணவி பிரபலமானார்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறி மாணவியை ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். தனது நண்பர் விருந்து கொடுப்பதாகவும், எனவே இதனை யாரிடமும் கூற வேண்டாம் என அந்த மாணவியிடம் கூறி ஓட்டலுக்கு அழைத்து சென்ற அவர் அங்கு மாணவியிடம் அத்துமீறியுள்ளார்.

    இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்ட நிலையில் உன்னை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவேன் என மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில், ஆசிரியர் மீதும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியரின் நண்பர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யோகா கற்றுக் கொடுக்கும்போது மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள கோல்டன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 54). இவர் கோவை நகரின் மத்தியில் உள்ள பிரபல பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு யோகாவும் கற்றுக் கொடுத்தார்.

    இந்தநிலையில் யோகா கற்றுக் கொடுக்கும்போது மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே மாணவிகள் பள்ளி முதல்வரிடம் சென்று புகார் செய்தார்.

    ஆசிரியர் ராஜன், யோகா பயிற்சியின்போது தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பேசுவதாகவும் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஓவிய ஆசிரியர் ராஜனை பிடித்து விசாரித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை இன்று கைது செய்தனர்.

    கோவையில் 17 வயது சிறுமியை அறையில் அடைத்து கூட்டு பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு யோகா ஆசிரியர் கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் செல்போனில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
    • குறுந்தகவல் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா கண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓலையம்பாடியை சேர்ந்த சஜீஷ் (வயது 38) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பரியாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சஜீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • டியூசனுக்கு சென்று விசாரித்தபோது ஆசிரியர் காந்தராஜின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • டியூசன் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுனை சேர்ந்த சுரேஷ்குமார்-அஸ்வினி தம்பதியின் மகள் திவ்யா (வயது10). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    பள்ளி முடிந்து தினமும் அதேப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான காந்தராஜ் (வயது 50) என்பவரிடம் டியூசன் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சிறுமி டியூசனுக்கு சென்றாள். இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் டியூசனுக்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது ஆசிரியர் காந்தராஜ் சிறுமி வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினார். இதனால் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் மலவள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டியூசனுக்கு சென்று விசாரித்தபோது ஆசிரியர் காந்தராஜின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த வேளையில் டியூசன் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டியூசன் ஆசிரியர் காந்தராஜிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    டியூசனுக்கு வந்த சிறுமியை ஆசிரியர் காந்தராஜ் சாக்லெட் தருவதாக கூறி அருகே உள்ள தனியார் கட்டிடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டார்.

    மேலும் நடந்த சம்பவத்தை சிறுமி வெளியே கூறி விடுவாள் என்று பயந்து மூச்சை திணறடித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு ஒன்று தெரியாததுபோல் இருந்துள்ளார்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த கொலையை கண்டித்து நேற்று மலவள்ளி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×