என் மலர்
நீங்கள் தேடியது "Harassment Complaint"
- 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை போக்குவரத்து பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார்.
ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பெண் போலீஸ் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காவலர் இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அரசு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விசாகா கமிட்டியில் இடம்பெற்று உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு துறையில் உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன் பேரிலேயே ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, காவல் துறையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்கள் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
- குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
- ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள், இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி என்ற திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம்.
- சம்பந்தப்பட்டவர்கள் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
சென்னை:
சென்னை குரோம்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கிருஷ்ணகிரி, மணப்பாறை பள்ளி மாணவிகள் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி என்ற திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம். இருந்தாலும் சில நேரத்தில் பிள்ளைகள் மனதில் உள்ள பய உணர்வு காரணமாக வெளியே சொல்லாமல் இருக்கக்கூடிய நிலை இருப்பதால் தான் ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, 800-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் மீறி இப்படி நடக்கும்போது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். டிஸ்மிஸ் செய்வது, கடுமையான தண்டனைகள் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி அவர்களின் கல்வித்தகுதியை ரத்து செய்ய வேண்டும். இனிமேல் எதற்கும் செல்ல முடியாத அளவிற்கு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
இனிமேல் தண்டனையோடு மட்டும் நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார்.
- ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை:
திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப். இவரது மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்ல ரேவதி முடிவு செய்தார். அதன்படி கணவருடன் ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார்.
திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டை வந்தவுடன் சக பெண் பயணிகள் இறங்கிவிட்டனர். ரேவதி மட்டும் தனியாக இருந்தார்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் (வயது 28) என்பவர் பெண்கள் பொது பெட்டியில் ஏறினார். அப்போது ரேவதி இது பெண்கள் பெட்டி என்று கூறினார். அதற்கு ஹேமராஜ் அவசரமாக ஏறி விட்டதாகவும், அடுத்த ரெயில் நிலையம் வந்தவுடன் இறங்கி விடுவதாக கூறி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் ரெயில் பெட்டியின் கழிவறைக்கு சென்றார். பேண்ட் மற்றும் சட்டை இல்லாமல் ரேவதியின் முன்னால் அரை நிர்வாணத்துடன் வந்து நின்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி கத்தி கூச்சலிட்டார். திடீரென ரேவதியை சரமாரியாக வாலிபர் தாக்கினார்.
கர்ப்பிணி என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். வாலிபரிடமிருந்து தப்பிக்க கர்ப்பிணி போராடினார்.
இதில் ஆத்திரமடைந்த ஹேமராஜ் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். ரெயில் காட்பாடி வந்தவுடன் ஹேமராஜ் அங்கிருந்து இறங்கி தப்பி சென்றார்.
ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து ஜோலார்பேட்டை ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த கர்ப்பிணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ரெயில்வே எஸ்.பி. உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ஹேமராஜை தேடி வந்தனர். காட்பாடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஹேமராஜை இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஹேமராஜ் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் இருந்து ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் செல்போன் பறித்ததும், காட்பாடி அருகே வந்தவுடன் இளம்பெண்ணை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதும் தெரிந்தது.
2023-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து காட்பாடிக்கு அழைத்து வந்ததும், அங்கு வைத்து இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து ஜாமினில் வெளியே வந்ததும் தெரிந்தது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் ஹேமராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை.
- கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரெயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரெயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்.
மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும்.
கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல… pic.twitter.com/SNLMjXkPxm
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) February 7, 2025
- வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.
- கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்ட்டுள்ளான்
- சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது..
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை FIR ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
- சீண்டல் எல்லை மீறி போனதால் மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று பொங்கல் பண்டிகையை யொட்டி அவர் கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்கு உடன் படித்து வரும் நண்பருடன் டீ குடிப்பதற்காக சென்றார்.
அப்போது அங்கு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது சீண்டல் எல்லை மீறி போனதால் அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் பேக்கரி கடைக்கு விரைந்து வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது பெயர் ஸ்ரீராம் (29). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மாணவியின் புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நேற்று மாலை 5.30 மணியளவில், ஒரு டீக்கடையில், சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் வந்த மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வளாகத்திற்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐ.ஐ.டி.யுடன் எந்த தொடர்பும் இல்லை.
சென்னை ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாணவிகள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்டது.
புதுடெல்லி:
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே போலீஸ் கமிஷனருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஐகோா்ட்டு உத்தரவை நீக்கி உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோட்டூர்புரம் லேக்வியூ ஏரிக்கரை பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை செய்தனர்.
- ஞானசேகரன் வீடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கினை ஐகோர்ட்டு நியமித்த 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் கொண்ட புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இவர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோட்டூர்புரம் லேக்வியூ ஏரிக்கரை பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சிக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் ஞானசேகர் வீடு குறித்த அறிக்கையை வருவாய்த்துறையிடம் கேட்டனர். அதனடிப்படையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் ஞானசேகரன் வீட்டினை அளந்து, ஆவணங்களை பார்த்தனர்.
அப்போது அந்த வீடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலம், அந்த கோவிலுக்குதான் சொந்தமானது. கோவில் நிலத்தில்தான் ஞானசேகரன் 3 மாடி வீடு கட்டியுள்ளார். இது கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடு என்பதால், வருவாய்த்துறையினர் அறிக்கை ஒன்றை தயாரித்து, அதனை அறநிலையத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். எனவே இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை தனது விசாரணையை தொடங்க உள்ளது.
இந்நிலையில் கோட்டூர்புரத்தில் ஞானசேகரன் வீடு உள்பட மேலும் பல வீடுகள் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஞானசேகரனின் வீட்டை அளவீடு செய்த நிலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து 21 வீடுகள் கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலை. சம்பத்திற்கு நான் என்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறேன்.
- விசாரணையில் யார் அந்த சார்... என்பது வெளிப்படலாம். அல்லது அப்படி ஒரு நபர் இல்லை என்பதும் தெரிய வரலாம்.
சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. அங்கு நம்முடைய பிரதமர் அங்கு சென்று என்ன என்று கூட கேட்கவில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு குற்றம் நடந்து இருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். நம்முடைய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.
காவல்துறை நடவடிக்கை எடுத்த பிறகு, வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு நியாயமான தண்டனை கிடைப்பதுதான் அந்த பெண்ணுக்கான நியாயம் கிடைத்ததாக இருக்கும். நாம் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.
அண்ணா பல்கலை. சம்பவத்திற்கு நான் என்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறேன்.
பொள்ளாச்சி சம்பவம் போல் குற்றவாளிகளை காப்பாற்றக்கூடிய ஒரு நிலை இல்லை.
குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் நியாயமாக தீர்ப்பு வழங்க வேண்டும். வழக்கு சரியாக நடத்தப்படுகிறா என்பதை கண்காணிக்க வேண்டும்.
விசாரணையில் 'யார் அந்த சார்'... என்பது வெளிப்படலாம். அல்லது அப்படி ஒரு நபர் இல்லை என்பதும் தெரிய வரலாம்.
நிர்பயா வழக்கில் கூட பா.ஜ.க.வில் சில பேர் 'அண்ணா' என்று சொல்லி இருந்தால் விட்டுருப்பார்கள் என்று சொன்னார்கள். நான் அப்படி சொல்லவில்லை.
நடவடிக்கை எடுத்த பிறகு போராடக்கூடிய ஒரு சூழல் இருக்கும்போது, எதிர்க்கட்சி அதை கையில் எடுத்துக்கொண்டு அரசியலாக்கத்தான் பார்க்கிறார்கள்.
எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தமிழக அரசு காரணம் இல்லை.
அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்டதற்கு நான் என்ன சொல்ல முடியும்.
ஆடுகள் அடைக்கும் இடத்தில் ஆடுகளை விட்டு விட்டு ஏன் மனுஷங்களை அடைக்கப்போகிறார்கள் என்று கூறினார்.
- பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பருவ வயது காதலில் விழுகின்றனர்.
- இது போன்ற வழக்குகளில் குற்றம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு சிறுமிகள் பெண்கள் உட்பட 2945 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தெரிந்தவர்கள் மூலமே அதிக அளவில் நடந்துள்ளது.
குறிப்பாக 1912 பேர் நன்றாக தெரிந்தவர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பிடும் பொழுது 2024-ம் ஆண்டில் அதிக அளவில் தெலுங்கானாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 1,251 பேர் சிறுமிகள் அதாவது மொத்த வழக்குகளில் 82 சதவீதம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்குகளுக்கு போலீசார் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் 90 சதவீத வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பருவ வயது காதல் ஒரு காரண மாக அமைந்துள்ளது. படிக்கின்ற காலத்தில் காதல் வயப்படும் சிறுமிகள் ஆசை வார்த்தைகளால் ஏமாந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பெண் பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி. ஷிகா கோயல் கூறுகையில்:-
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பருவ வயது காதலில் விழுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இது போன்ற வழக்குகளில் குற்றம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது அதிக அளவு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பாக ரூ.5.42 கோடி வழங்கப்பட்டுள்ளன. இது தவிர கடத்தல் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார்.