என் மலர்

  நீங்கள் தேடியது "medals"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
  • இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

  பர்மிங்காம்:

  22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

  இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

  ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.

  இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
  • இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

  மேலூர்

  மதுரை மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் காரியாபட்டி தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

  இதில் மினி சப் ஜூனியர் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மினி ஜூனியர் பிரிவில் மேலூர் ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ருகினா, லத்யஸ்ரீ, சந்தோஷ், ரஞ்சன், தயாநிதி ஆகியோர் தங்கப்பதக்கமும், ரோஹித், நிஷா, சோபியா ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்றனர். யோசினி ஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

  சப் ஜூனியர் பிரிவில் கோபிகாஸ்ரீ, ஜனனி, நிஷா, நகுல், கஜேஸ்வரன், ஹரிஷ், மதுரேஸ், நிதிஷ்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். கேடட் பிரிவில் அர்ச்சனாதேவி, பவித்ரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.

  ஜூனியர் பிரிவில் முரளி கிருஷ்ணன் தங்கப் பதக்கமும், சந்துரு வெள்ளி பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.சீனியர் பிரிவில் தமிழ் தேவா தங்கப்பதக்கமும்,

  மினி சப் ஜூனியர் பிரிவில் மேலூர் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவர் போதிஸ்வரன் தங்கம் பெற்றார். கேடட் பிரிவில் மதுரை சேதுபதி பள்ளி மாணவன் சுதேசன் தங்கம் வென்றான். கேடட் பிரிவில் தனியாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் வெண்கல பதக்கமும், கேடட் பிரிவில் மேலூர் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவன் அகிலா வெள்ளி பதக்கம் வென்றனர்.

  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் சாலுமான், செயலாளர் புஷ்பநாதன், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தோனேஷிய ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. #AsianGames #India
  ஜகர்தா:

  இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று டிரையத்லானில் (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகள் அடங்கியது) கலப்பு பிரிவு போட்டி மட்டும் நடக்கிறது. இதில் இந்திய தரப்பில் யாரும் இல்லாததால் நமக்குரிய பதக்க வாய்ப்புகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இந்தியா எதிர்பார்க்கப்பட்ட கபடி, ஆக்கியில் ஜொலிக்கவில்லை.  இருப்பினும் இதுவே இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. சீனாவில் 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் வென்றதே ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அதை விட இப்போது கூடுதலாக 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அத்துடன் 1951-ம் ஆண்டு நடந்த முதலாவது ஆசிய விளையாட்டில் 15 தங்கம் வென்றதே, ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச தங்கவேட்டையாக இருந்தது. அது தற்போது சமன் செய்யப்பட்டு இருக்கிறது.

  வழக்கம் போல் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை (132 தங்கம் உள்பட 289 பதக்கம்) ஆக்கிரமித்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை அள்ளியுள்ளது. போட்டியையும் வெற்றிகரமாக நடத்தியிருப்பதால் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு உரிமம் கோரப்போவதாக இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாகமாக அறிவித்து இருக்கிறார்.

  ஆசிய விளையாட்டு போட்டியின் கோலாகலமான நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறுகிறது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை, பாடல் உள்ளிட்டவையுடன் பிரமிக்கத்தக்க வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிறைவு விழாவை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதையடுத்து இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. #asiangames2018
  ஜகார்தா:

  18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேற்று ஒரேநாளில் 7 பதக்கத்தை பெற்றது. தடகளத்தில் 3 வெள்ளியும், குதிரையேற்றத்தில் 2 வெள்ளியும் கிடைத்தது.

  ‘பிரிட்ஜ்’ ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றது.

  8-வது நாள் முடிவில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 36 பதக்கம் பெற்றுள்ளது.

  மேலும் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியாகி உள்ளது.

  வில்வித்தை பந்தயத்தில் காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் 2 வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இறுதிப்போட்டியில் இந்திய அணிகள் கொரியாவை சந்திக்கிறது. நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. பெண்கள் போட்டி காலை 11.15 மணிக்கும், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டி மதியம் 12.05 மணிக்கும் தொடங்குகிறது.

  பெண்கள் வில்வித்தை அணி கால்இறுதியில் 229-224 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், அரை இறுதியில் 225- 222 என்ற கணக்கில் சீனதைபேயையும் தோற்கடித்தது.

  ஆண்கள் வில்வித்தை அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 227-213 என்ற கணக்கில் கத்தாரையும், கால்இறுதியில் 227-226 என்ற கணக்கில் பிலிப்பைன்சையும், அரை இறுதியில் 231-227 என்ற கணக்கில் சீனதைபேயும் வீழ்த்தியது. #asiangames2018
  ×