search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி
    X

    வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி

    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதையடுத்து இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. #asiangames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேற்று ஒரேநாளில் 7 பதக்கத்தை பெற்றது. தடகளத்தில் 3 வெள்ளியும், குதிரையேற்றத்தில் 2 வெள்ளியும் கிடைத்தது.

    ‘பிரிட்ஜ்’ ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றது.

    8-வது நாள் முடிவில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 36 பதக்கம் பெற்றுள்ளது.

    மேலும் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியாகி உள்ளது.

    வில்வித்தை பந்தயத்தில் காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் 2 வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.



    இறுதிப்போட்டியில் இந்திய அணிகள் கொரியாவை சந்திக்கிறது. நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. பெண்கள் போட்டி காலை 11.15 மணிக்கும், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டி மதியம் 12.05 மணிக்கும் தொடங்குகிறது.

    பெண்கள் வில்வித்தை அணி கால்இறுதியில் 229-224 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், அரை இறுதியில் 225- 222 என்ற கணக்கில் சீனதைபேயையும் தோற்கடித்தது.

    ஆண்கள் வில்வித்தை அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 227-213 என்ற கணக்கில் கத்தாரையும், கால்இறுதியில் 227-226 என்ற கணக்கில் பிலிப்பைன்சையும், அரை இறுதியில் 231-227 என்ற கணக்கில் சீனதைபேயும் வீழ்த்தியது. #asiangames2018
    Next Story
    ×