search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "common wealth games"

    • முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார்.
    • நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    அனுப்பர்பாளையம் :

    மதுரையை பூர்வீமாக கொண்ட தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் (வயத 23) பெர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார். முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த மதன் பவுண்டேஷன் சார்பில் திருமுருகன்பூண்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் தலைவர் சக்திவேல் மற்றும் அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் தேஜஸ்வின் சங்கருக்கு பொன்னாடை போர்த்தி ரூ.5 லட்சம் காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினர். மேலும் பயிற்சியாளர் சுனில் குமாருக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளிக் குழந்தைகளுடன் விளையாட்டு துறையில் சாதிப்பது குறித்த கலந்துரையாடலில் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பதிலளித்தார்.

    • இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
    • இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

    இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

    ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.
    • இதனால் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இன்று விளையாடியது.

    இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    • வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    அரையிறுதியில் இந்தியா பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    • வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
    • இந்திய அணியின் சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடி பெருமை.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கலப்பு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், இந்திய அணியின் சாதனைக்காக பெருமைப்படுவதாக கூறினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " இந்தியாவில் பேட்மிண்டன் மிகவும் போற்றப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பேட்மிண்டன் விளையாட்டை இன்னும் பிரபலமாக்குவதற்கும், வரும் காலங்களில் அதிகமான மக்கள் விளையாட்டை தொடருவதை உறுதி செய்வதற்கும் உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
    • காமன்வெல்த் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாகூர் வெற்றி.

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

    சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3- 1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது. தொடர்ந்து, காமன்வெல்த் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாகூர் வெற்றி பெற்றார்.

    96 கிலோ எடைப் பிரிவில் மொத்தமாக 191 கிலோ எடையை தூக்கி விகாஷ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

    • லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை.
    • இந்தியாவுக்கு 4வது தங்கம் பெற்றுள்ளது.

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில், காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    பெண்கள் 4 பேர் பிரிவில் தென்னாப்பிரிக்காவை 10- 17 என்ற புள்ளியில் வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக தங்கம் வென்றுள்ளது. இதன்மூலம், இந்தியாவுக்கு 4வது தங்கம் பெற்றுள்ளது.

    • இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
    • இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

    இந்தநிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது.

    வானம் தெளிவான பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய முனிபா அலி 32 ரன்கள் எடுத்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கணையான இரம் ஜாவத் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

    அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய ஷபாலி வர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
    • ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரிமி தங்கம் வென்றார்.

    ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் 300 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுங்கா முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ஜெரிமி இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில், காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், " நமது யுவசக்தி சரித்திரம் படைத்து வருகிறது! ஜெரேமி ல்ரினுங்காவுக்கு வாழ்த்துக்கள். அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் மற்றும் ஒரு அற்புதமான சாதனையையும் படைத்துள்ளார்.

    இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    ×