காமன்வெல்த்: வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.இந்திய அணியின் சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடி பெருமை.
காமன்வெல்த்: வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கலப்பு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், இந்திய அணியின் சாதனைக்காக பெருமைப்படுவதாக கூறினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " இந்தியாவில் பேட்மிண்டன் மிகவும் போற்றப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பேட்மிண்டன் விளையாட்டை இன்னும் பிரபலமாக்குவதற்கும், வரும் காலங்களில் அதிகமான மக்கள் விளையாட்டை தொடருவதை உறுதி செய்வதற்கும் உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com