என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badminton"

    • ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மலேசியாக சர்வதேச சேலஞ்ச் பட்டத்தை வென்றார்.
    • கடந்த ஆண்டு இரண்டு தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

    இதில் அரியானாவைச் சேர்ந்த 20 வயதான தேவிகா சிஹாக், 11-21, 9-21 என நேரம் கேம் கணக்கில் தொல்வியடைந்து சாம்பியன் பட்டம் வாய்ப்பை இழந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மலேசியா சர்வதேச சேலஞ்ச் பட்டத்தை வென்றார்.

    இளம் வீராங்கனையான தேவிகா சிஹாக், கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்த ஓபன், போர்ச்சுக்கல் இன்டர்நேசனல் டைட்டிலை வென்றுள்ளார். எஸ்தோனியா சர்வதேச மற்றும் நெதர்லாந்து சர்வதேச போட்டிகளில் 2ஆவது இடம் பிடித்தார்.

    • மலேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
    • சீன-தைபே ஜோடியை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    சீனா மாஸ்டர் பேட்மிண்டனில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி நேர்செட் கேமில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன-தைபேயின் சியு-வாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-13, 21-12 என எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    அதுபோல் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பி.வி. சிந்து தாய்லாந்தின் சோச்சுவாங்கை 21-15, 21-15 என வீழ்த்தினார். சோச்சுவாங்கிற்கு எதிராக பி.வி. சிந்துவின் வெற்றி 6-5 என உள்ளது.

    முன்னதாக, மலேசிய ஜோடியான ஜுனைதி ஆரிஃப்- ராய் கிங் யாப்பை 24-22, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    முதல் கேமில் இந்தியா- மலேசியா ஜோடிகள் மாறிமாறி புள்ளிகள் பெற்றன. இதனால் இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சென்றது. இறுதியாக இந்திய ஜோடி 24-22 என முதல் கேமை வென்றது.

    2ஆவது கேமில் 5-5 என சமநிலையில் இருந்து நிலையில், இந்திய ஜோடி 11-6 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மலேசிய ஜோடியால் இந்திய ஜோடியை முந்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    என்றபோதிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    சாத்விக்- சிராஜ் ஜோடி கடந்த வாரம் நடைபெற்ற ஹாங்காங் ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்ட்டோ ஜோடியும் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தது.

    • சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

    இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்தார்.

    இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கணவரை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,

    அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

    கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சாய்னா நேவால், "சில நேரங்களில் நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு அவர்கள் தூரமாக இருக்கும்போது தான் தெரிகிறது. மீண்டும் தங்களது உறவை கட்டமைக்க முயற்சிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நன்றாக பேட்மிண்டன் விளையாடி வரும் ராகேஷ் திடீரென சரிந்து கீழே விழுவது பதிவாகியுள்ளது.

    உடனடியாக அவரது நண்பர்கள் ராகேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தற்போதைய காலகட்டத்தில், இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.

    ஐதராபாத்,

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

    இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டுள்ளார். பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை.

    • மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் - அயர்லாந்தின் நுயென் உடன் மோதினர்.

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் - அயர்லாந்தின் நுயென் உடன் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் பிரான்சின் டி.போ போவ்வுடன் மோதுகிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி-பிரான்சின் டி. போபோவ் மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 13-21,17-21 என்ற செட் கணக்கில் தோற்றார். மற்றொரு இந்திய வீரரான சதீஷ் கருணாகரன் 14-21, 16-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சி.போ போவ்விடம் தோற்று வெளியேறினார்.

    • 16-21, 21-12, 11-21 என சீனாவின் ஜு குயாங் லுவிடம் வீழ்ந்தார்.
    • கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய், சீனாவின் ஜு குயாங் லு-வை எதிர்கொண்டார்.

    இதில் 16-21, 21-12, 11-21 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்ததார்.

    மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப், அனுபமா உத்யாயா தொடக்க சுற்றுடன் வெளியேறினர். ஆகார்ஷி 13-21, 7-21 என தோல்வியடைந்தார். அனுபமா 13-21, 14-21 என தோல்வியடைந்தார்.

    • தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில்

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • மாநில இறகு பந்து போட்டிக்கு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்தியது.

    இதில் 19 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவியை முதல்வர் புஷ்பம், உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி
    • இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    பேசெல்:

    ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங்- டான் கியாங் ஜோடியை 54 நிமிடங்களில் 21-19, 24-22 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்த நிலையில், இன்றைய வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். சாத்விக்-சிராக் ஜோடிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

    • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது.
    • கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கப்பச்சி கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிபோட்டி நடந்தது.

    இதில் இளித்துறை அணிக்கும் கெங்கமுடி அணியும் மோதின. இந்த போட்டியில் கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டனர். அவருக்கு கிளப் சார்பில் மேளத்தளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளர்ச்சிக்காக ரூபாய்_25000 நிதி உதவி வழங்கினார்.

    • 1965ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    துபாய்:

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ யி ஜோடியை 16-21, 21-17, 21-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

    ×