என் மலர்
விளையாட்டு

டெல்லி காற்று மாசு காரணமாக இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகிய உலக பேட்மிண்டன் சாம்பியன்
- டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன் 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
- தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளார்.
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், 4 முறை பேட்மிண்டன் உலக சாம்பியனான டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன், டெல்லி காற்று மாசுவின் காரணமாக 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளதாகவும் "இது ஒரு பேட்மிண்டன் போட்டி நடத்துவதற்கு தகுதியான இடம் அல்ல" எனவும் தனது இன்ஸ்டாகிராமில் அண்டர்ஸ் அண்டன்சன் பதிவிட்டுள்ளார்.






