என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய ஓபன் பேட்மிண்டன்"
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் ஜோடி முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடிஅடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் நிஷிமோட்டோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய்வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பி.வி. சிந்து முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார்.
- அதன்பின் 12-21, 15-21 என 2-வது மற்றும் 3-வது கேம்களை இழந்தார்.
இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து, முதல் சுற்றில் வியட்நாமின் துய் லிங் நகுயென்னை எதிர்கொண்டார். இதில் 68 நிமிடங்கள் போராடி பி.வி. சிந்து தோல்வியை சந்தித்தார். முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களில் 12-21, 15-21 என தோல்வியை சந்தித்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இந்தியாவின் மற்றொரு வீரரான தருண் மன்னேபல்லியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிடாம்பி 15-21, 21-6, 21-19 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மாளவிகா பன்சாத் சீன தைபேயின் யு போவை 21-18, 21-19 என வீழ்த்தினார்.
அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 3 ஜோடிகள் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்தன.
- டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன் 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
- தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளார்.
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், 4 முறை பேட்மிண்டன் உலக சாம்பியனான டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன், டெல்லி காற்று மாசுவின் காரணமாக 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளதாகவும் "இது ஒரு பேட்மிண்டன் போட்டி நடத்துவதற்கு தகுதியான இடம் அல்ல" எனவும் தனது இன்ஸ்டாகிராமில் அண்டர்ஸ் அண்டன்சன் பதிவிட்டுள்ளார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்–பார்ன் சுகிதா சுவாச் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-ஹரிகரன் அம்ச கருணன் ஜோடி 21-15, 21-18 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் யீ சின்-டியோ ஈ யி ஜோடியை வெளியேற்றியது.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
- இந்த தொடர் இன்று தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டவரான ஆயுஷ் ஷெட்டியை சந்திக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், சீன தைபேயின் லின் சுன் யியையும், பிரனாய், சீனாவின் லீ சுக் யூயையும் எதிர்கொள்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனும், கடந்த வாரம் நடந்த மலேசிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறியவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வியட்நாமின் நுயென் துய் லின்னுடன் தனது மோதலை தொடங்குகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், சீன தைபேயின் பாய் யூ போவை சந்திக்கிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்பவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, அமெரிக்காவின் சென் ஜி யி-பிரெஸ்லி சுமித் ஜோடியுடன் தனது சவாலை தொடங்குகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் கூட்டணி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்பார்ன்- சுகிதா சுவாச் இணையோடு பலப்பரீட்சை நடத்துகிறது. பிரியா- ஸ்ருதி மிஸ்ரா, கவிபிரியா- சிம்ரன் சிங் (பெண்கள் இரட்டையர்), துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டா (கலப்பு இரட்டையர்) உள்ளிட்ட இந்தியர்களும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
- நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் வென்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுபநிடா கேட்டோங் ஆகியயோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற கணக்கில் சுபநிடா கேட்டோங் வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து இந்திய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பில்ட்டை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- இன்று நடந்த போட்டியில் ஶ்ரீகாந்த் கிடாம்பி, விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் கிடாம்பி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார்.
- திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும்.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் இந்தியா சார்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 44 வீரர், வீராங்கனைகள் களம் இறக்கப்படுகிறார்கள்.
இதில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் ஷூவ் யன் ஜங்கை (சீனதைபே) சந்திக்கிறார். முன்னதாக சிந்து சக நாட்டவரான அனுபமா உபத்யாயாவுடன் மோதும் வகையில் அட்டவணை அமைந்திருந்தது. ஆனால் கடைசிகட்ட மாற்றங்களால் சிந்துவின் எதிராளியும் மாறி விட்டார்.
சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும். கடந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை தழுவிய சிந்து உள்ளூர் சூழலில் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஒலிம்பிக் சாம்பியன் அன்சே யங் (தென்கொரியா), 2-ம் நிலை வீராங்கனை வாங் ஷியி (சீனா), முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்ற இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், மாள்விகா பன்சோத், அனுபமா உபத்யாயா ஆகியோரை பொறுத்தவரை ஓரிரு சுற்றை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும்.
29 வயதான சிந்து நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'திருமணத்திற்கு பிறகு எனது முதல் போட்டி இதுவாகும். அத்துடன் புத்தாண்டிலும் முதல் தொடராகும். எனவே எல்லாமே புதுசு. உள்ளூர் ரசிகர்கள் முன் எனது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
பாரீஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு உடல் அளவிலும், மனதளவிலும் வலுவாக மீண்டு வருவதற்கு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. கடந்த ஆண்டின் கடைசி பகுதியில் கிடைத்த இடைவெளி புத்துணர்ச்சியுடன் மீண்டு வருவதற்கு உதவியது. என்னால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்த வெறி எனக்குள் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 3-ம் நிலை வீரர் ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), இந்தியாவின் லக்ஷயா சென், பிரனாய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கடைசி நேரத்தில் 'நம்பர் ஒன்' வீரர் ஷி யுகி (சீனா), ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான அந்தோணி கின்டிங் (இந்தோனேசியா) ஆகியோர் விலகியதால் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரண்ஜார்ஜ் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
2022-ம் ஆண்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் சுற்றில் சீனதைபேயின் லின் சுன் யியை எதிர்கொள்கிறார். பிரனாய் முதல் ரவுண்டில் சு லீ யாங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்டுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், ஜப்பானின் கோடாய் நராவ்காவுடன் மோதுகிறார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் மலேசியாவின் மான்வெய் சோங்- டீ காய் வுன் இணையை சந்திக்கிறது. பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணை தங்களது சவாலை ஜப்பானின் அலிசா இகராஷி- அயகோ சுகுரமோட்டோ ஆகியோருடன் தொடங்குகிறார்கள்.
சாத்விக்- சிராக் ஷெட்டி கூறுகையில, 'கடந்த ஆண்டு மலேசிய ஓபனில் இறுதி சுற்றில் விளையாடி விட்டு இங்கு (இந்திய ஓபன்) வந்தோம். இங்கும் இறுதிசுற்றை எட்டினோம். இந்த சீசனில் மலேசிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறி விட்டு வந்துள்ளோம். ஆனால் கடந்த ஆண்டின் முடிவை விட மேலும் முன்னேற்றம் காண விரும்புகிறோம்' என்றனர்.
ஒற்றையரில் கோப்பையை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.58 லட்சமும், இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.61 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.






