என் மலர்
நீங்கள் தேடியது "Indian Open Badminton"
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை மனாமி சுய்சுவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா-மிட்சுஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் முதல் செட்டை இழந்த சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை துன்ஜங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய துன்ஜங் 21-9, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் ஜின்-காங் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-10, 21-17 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் கோ-இசுதின் ஜோடியை எதிர்கொள்கிறது.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் கோ-இசுதின் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் முக்தா அக்ரியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) போராடி தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சுபாங்கர் தேவ் 14-21, 22-20, 21-11 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரர் டாமி சுகியர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார். சாய் பிரனீத், சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர். #IndianOpenBadminton #PVSindhu