என் மலர்

  நீங்கள் தேடியது "wins"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
  பாரீஸ்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

  3-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

  இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த நம்பர் ஒன் புயல் நவோமி ஒசாகா, சுலோவாக்கியா வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை எதிர்கொண்டார். 

  ஒசாகா 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சிமிட்லோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.   இதேபோல், ருமேனியா நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியா நாட்டின் டோம்ஜனோவிச்சை எதிர்கொண்டார். ஹாலெப், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் டோம்ஜனோவிச்சை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
  பாரீஸ்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

  இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.  மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார். #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy
  கீவ்:

  கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53), பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

  இதில் பெட்ரோ பொரஷென்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத டி.வி. நகைச்சுவை நடிகரான ஜெலன்ஸ்கி (41) களம் இறங்கினார்.

  அரசியலில் புதிய மாற்றத்தை விரும்பிய உக்ரைன் மக்கள் ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர். இதனால் களத்தில் இருந்த மற்ற 35 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பெட்ரோ பொரஷென்கோவிற்கு நேரடி போட்டியாளராக மாறினார்.

  தனது அரசியல் கொள்கை இதுதான் என்பதை தெளிவுபடுத்தாத ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை தவிர்த்தார். இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளான போதும், மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது.  இதில், பெட்ரோ பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி 70 சதவீதம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 2-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெலன்ஸ்கி சுமார் 74 சதவீத வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றார்.

  பொருளாதார பேராசிரியரான அலெக்சாண்டர் ஜெலன்ஸ்கிக்கு மகனாக பிறந்த ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.

  அதனை தொடர்ந்து, டி.வி. தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடக்க தொடங்கினார். அவரது டி.வி. தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

  இந்த நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (சர்வண்ட் ஆப் பீப்புள்) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

  கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.

  இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.

  இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.

  அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார்.  #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், அவர் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy
  கீவ்:

  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபராக, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் பதவியில் இருப்பவர், பெட்ரோ போரோஷெங்கோ. இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 31-ந் தேதி நடத்தப்பட்டது.

  இந்த தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பெட்ரோ போரோஷெங்கோ, மீண்டும் அதிபர் ஆவதற்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து 38 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அவருக்கும், அந்த நாட்டின் நகைச்சுவை நடிகரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (வயது 41) என்பவருக்கும், முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோவுக்கும் இடையேதான் நிலவியது. இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி முன்னிலையில் இருந்தார். எனினும் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.

  உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஒரு வேளை அப்படி யாரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். முதல் சுற்று தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.  அதன்படி, நேற்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பெட்ரோ போரோஷெங்கோ, வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பும் ஜெலன்ஸ்கிக்கு சாதகமாகவே இருந்தது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார்.

  70.33 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 73 சதவீத வாக்குகளை ஜெலன்ஸ்கி பெற்று பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய அதிபர் பெட்ரோ போரேலாஷெங்கோ 24.66 சதவீத வாக்குகளே பெற்றிருந்தார். எனவே, ஜெலன்ஸ்கியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

  ஆனால், நேற்று இரவில் இருந்தே ஜெலன்ஸ்கி  மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஜெலன்ஸ்கி, தனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்த மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என கூறினார். #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்றனர். #IndianOpenBadminton #PVSindhu
  புதுடெல்லி:

  இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் முக்தா அக்ரியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) போராடி தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சுபாங்கர் தேவ் 14-21, 22-20, 21-11 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரர் டாமி சுகியர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார். சாய் பிரனீத், சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர். #IndianOpenBadminton #PVSindhu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டத்துடன், 7 கோடி ரூபாய் பரிசு வென்ற சென்னை சிறுவனை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்தினார்.
  சென்னை:

  அமெரிக்காவில் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  சென்னையை சேர்ந்த பியானோ கலைஞரான 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார். தனது அசாத்திய திறமையால் பியானோ வாசித்த லிடியன், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார்.

  இந்தநிலையில் இந்த போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் லிடியன் வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில், 2 பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து பட்டம் வென்ற லிடியனுக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ பட்டம் வென்ற லிடியனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்தினார். பின்னர் லிடியனுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

  லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  லிடியனுக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்பட திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். #TheresaMay #BrexitDeal #ConfidenceVote
  லண்டன்:

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.
   
  ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

  இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

  அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் தெரசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்காகவும், ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர்.  அதன்படி தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டது.

  இதையடுத்து தெரசா மேவுக்கு எதிராக நேற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 317 எம்பிக்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார்.

  பிரதமர் மீது பாராளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடி தெரிவித்தார். #TheresaMay #BrexitDeal  #ConfidenceVote
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்மீனியாவில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். #ArmeniaElection #NikolPashinian
  யெரேவன்:

  முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு ஆர்மீனியா. இங்கு 30 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ரஷியாவின் பாதுகாப்புடன் இந்த நாடு செயல்படுகிறது. எனவே அதன் நெருங்கிய நட்பு நாடாக இது திகழ்கிறது.

  இங்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த சாக்ஷியானை புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்துவிட்டு நிகோல் பஷின்யான் பிரதமரானார்.

  இந்தநிலையில் அங்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றிபெற்றது.

  தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 70 சதவீதம் வாக்குகளை நிகோல் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

  இவர் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். ஏப்ரலில் அமைதியான முறையில் புரட்சி நடத்தி ஆட்சியை பிடித்தார்.  #ArmeniaElection #NikolPashinian
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பார்முலா1 கார்பந்தயத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். #LewisHamilton #Formula1
  ஹாக்கென்ஹீம்:

  இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.458 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 14-வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

  இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 4.5 வினாடி பின்தங்கிய பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2-வது இடம் பெற்றார். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட உள்ளூர் வீரர் செபாஸ்டியன் வெட்டலின் கார் துரதிர்ஷ்டவசமாக 55-வது சுற்றின் போது விபத்துக்குள்ளாகி பாதியில் வெளியேற நேரிட்டது. போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்றுள்ள செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 7, 8-வது இடங்களை பிடித்தனர்.

  11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 12-வது சுற்று போட்டி வருகிற 29-ந்தேதி ஹங்கேரியில் நடக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆபத்தான தருணத்தில் பெண்களை பாதுகாக்க சாதனம் உருவாக்கிய டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி தொழில் நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது. #WomenSafetyDevice
  புதுடெல்லி:

  எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறைந்த பாடில்லை. ஆங்காங்கே நடந்தபடியே உள்ளது.

  இந்த நிலையில், ஆபத்தான தருணத்தில் பெண்கள் சிக்கிக்கொண்டால், அதில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்து மீட்கப்படுவதற்கு உதவுகிற ‘சேபர் புரோ’ என்ற சாதனத்தை டெல்லியை சேர்ந்த ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனம் ‘லீப் வேரபிள்ஸ்’ உருவாக்கி உள்ளது.

  சிறிய ‘சிப்’ போன்ற இந்த சாதனத்தை பெண்கள் தங்களது ஆடை, அணிகலன்களில் அல்லது மற்றொரு சாதனத்தில் பொருத்திக்கொள்ள முடியும்.

  சேபர் புரோ’ சாதனத்தில் தங்களை ஆபத்பாந்தவர்களாக வந்து காக்கக்கூடிய 5 பேர் பற்றிய தகவல்களை பெண்கள் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் ஆடை, அணிகலன்களில் அல்லது வேறு ஏதேனும் சாதனத்தில் பொருத்தி தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

  எந்த ஒரு ஆபத்தான சூழலிலும் அந்த சாதனத்தில் உள்ள பொத்தானை அழுத்தி விட்டால் போதும், அவர்கள் எந்த இடத்தில் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் பதிவு செய்து வைத்து உள்ள 5 பேருக்கும் போய்ச் சேர்ந்து விடும். அவர்கள், அந்தப் பெண்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள். எந்த தகவலையும் பேசி ஒலிப்பதிவு செய்தும் இதன்மூலம் அனுப்ப முடியும்.

  இந்த சாதனம், டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி தொழில் நுட்ப பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனத்துக்கு அனு மற்றும் நவீன் ஜெயின் பெண்கள் பாதுகாப்பு பரிசு கிடைத்து உள்ளது. பரிசு 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) ஆகும்.

  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ‘லீப் வேரபிள்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் மாணிக் மேத்தா, நிஹரிகா ராஜீவ், அவினாஷ் பன்சால் ஆகியோர் கூட்டாக பரிசை பெற்று கொண்டனர்.  #WomenSafetyDevice  #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #BypollResults #BypollCongressWin
  புதுடெல்லி:

  உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

  இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

  கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகள் ஆதரவு அளித்தன.

  வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்கப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, 73 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

  இதேபோல் உ.பி.யின் நூர்பூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. லோகேந்திர சிங் சாலை விபத்தில் இறந்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் லோகேந்திர சிங்கின் மனைவி அவானி சிங் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமாஜ்வாடி கட்சி சார்பில் நீமுல் ஹசன் போட்டியிட்டார்.  இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மகாராஷ்டிர மாநிலம் பலாஸ் கதேகான் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்வஜீத் பதாங்ரோவ் கதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #BypollResults #BypollCongressWin

  ×