பிரெஞ்ச் ஓபன் - இரட்டையர் பிரிவில் பயஸ் மற்றும் போபண்ணா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பிரெஞ்ச் ஓபன் - இரட்டையர் பிரிவில் பயஸ் மற்றும் போபண்ணா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்:

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.

இதில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும் ருமேனிய வீரர் மாரிஸ் காபில் ஜோடி பிரான்சின் பெஞ்சமின் போன்ஜி மற்றும் அன்டோயன் ஹாங் ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 6–4, 6–4 என்ற நேர்செட்டில் எளிதில் வீழ்த்தியது.

இதேபோல், மற்றொரு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பெய்ர் ஜோடி சுலோவோக்கியா வீரர் மார்ட்டின் கிசான் மற்றும் இங்கிலாந்து வீரர் டொமினிக் இங்லாட் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் பயஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com