பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால், ரோஜர் பெடரர் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால், ரோஜர் பெடரர் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.

உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர், 63வது நிலை வீரரான நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பெர் ரூட்டுடன் மோதினார்.

இதில் பெடரர் 6–3, 6–1, 7–6 (10–8) என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி ரோஜர் பெடரருக்கு 400வது கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடால், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த டேவிட் கோபினுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ரபெல் நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com